அவமானப்படுத்திய மோடி.. கூட்டணியை விட்டு வெளியேறும் ஓபிஎஸ்? விஜய்க்கு எஸ்? நாளை முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தனது நிலைப்பாடு குறித்து ஜூலை 30-ம் தேதி ஊடகவியலாளர்களைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் நிலைப்பாடு: எதிர்பார்ப்புகள்
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின.

BJP O Panneerselvam

ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது நிலைப்பாடு குறித்து விவாதிக்க ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். இது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தனது நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் விவாதிக்க உள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னாள் முதலமைச்சர், தமது கட்சியின் எதிர்கால வியூகங்கள் குறித்து விளக்கலாம். பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, முக்கிய முடிவுகளை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கூட்டணி பிளான்

ஏற்கனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தது. இந்த இரு தலைவர்களும் அதிமுகவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உடன் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை தமிழக வெற்றி கழகத்திற்கு மாற்ற முடியும். நடிகர் விஜய் சரியான தொகுதியை தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றி கூட பெற முடியும். தற்போது பாஜக கூட்டணியில் உள்ள அமமுக - அதிமுக இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது.

அதிமுக - அமமுக உரசல்

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.

முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனால் அமமுகவின் டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. ஓ பன்னீர்செல்வத்தை கிட்டத்தட்ட நரேந்திர மோடி ஓரம்கட்டிவிட்டார். இதனால் அவரும் கூட பாஜக கூட்டணிக்கு போகாமல் வெளியேற வாய்ப்புகள் உள்ளன.

உருவாகும் புதிய கூட்டணி

இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

மேலூர் தொகுதியில் விஜய் நிச்சயமாக வெற்றி பெறலாம். நாடார் சமூகத்தின் ஆதரவு இருந்தால் திருநெல்வேலியிலும் முயற்சி செய்யலாம். ஏற்கனவே பாமகவும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால் அவர்களின் முதல் விருப்பம் அதிமுக தான். எடப்பாடி பழனிசாமி எந்த விலை கொடுத்தும் பாமகவை விட்டுக்கொடுக்க மாட்டார். ஏனெனில் சேலத்தில் மற்றும் சில வடமாவட்டங்களில் வெற்றி பெற அவருக்கு பாமகவின் ஆதரவு தேவை. எப்படியாவது அவர்களை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வார்.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால், கூட்டணி மூன்றாம் இடத்தைப் பிடிப்பதை உறுதி செய்ய முடியும். அதே சமயம் கடுமையாக அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்கவும் முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+