அதிமுக படுதோல்வி அடையும்.. எவ்வளவு கூட்டம் நடத்தினாலும் திமுகதான் ஜெயிக்கும் - ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அதிமுக - பாஜக எத்தனை கூட்டங்களை நடத்தினாலும் தேர்தலில் படுதோல்வியடைவார்கள் என ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.

ஓபிஎஸ் விளக்கம்
திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முதலமைச்சர் திமுக தொண்டர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் வழிநடத்தி வருகிறார். நான் திமுகவில் இணைந்திருக்கிறேன். கட்சியில் உள்ள அனைவரும் என்னை தங்களின் உடன் பிறந்த சகோதரனாக பாவித்து, அன்புடன் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர் [O Panneerselvam].
எந்த தொகுதி
தளபதி என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படி தான் நாங்கள் நடப்போம். என் காரில் ஜெயலலிதா அம்மா புகைப்படத்தை அகற்றியதை விமர்சிக்கிறார்கள். நான் திமுகவில் இணைந்துள்ளேன். அதனால் தலைவர் ஸ்டாலின் படம் இடம்பெறுவதில் எந்த தவறும் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்திக்கும். தலைவர் என்ன முடிவு செய்து எனக்கு வாய்ப்பு கொடுக்கிறாரோ அந்த தொகுதியில் நிற்பேன்.
கண்டனம்
தலைவர் என்ன திட்டத்தின்படி செயலாற்றுகிறாரோ அவருக்கு கீழ் பணியாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். அதிமுக - பாஜக எவ்வளவு கூட்டங்கள் நடத்தினாலும் தேர்தலில் அவர்கள் படுதோல்வியடைவார்கள். அடித்தட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் சமநோக்குடன் வாழ வேண்டும் என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். அவரின் படத்தை அகற்றியிருப்பது கடும கண்டனத்திற்குரியது. எனக்கு எந்த மனப் போராட்டமும் இல்லை. திமுகவில் நான் மன மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கிறேன்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications