மோடி அப்பாயிண்ட்மெண்ட் இல்லை.. ஓபிஎஸ்ஸை அப்படியே ஓரம் கட்டிய டெல்லி? ஆஹா சீன் மாறுதே.. முடிஞ்சதா?
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடி அல்லது அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கச் சொல்லி தனது மகன் ரவீந்திரநாத்திடம் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நேற்று எடப்பாடி பழனிசாமி வெற்றியடைந்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீர்ப்பு
அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், மிகவும் நொறுங்கிப் போனார் ஓபிஎஸ். இந்த தீர்ப்பு அவர் எதிர்பார்த்தது என்றாலும், தீர்ப்பு வந்த பின் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அவருக்கான கதவுகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இரட்டை இலை சின்ன வழக்கில் தோல்வி அடைந்தார். அதன்பின் பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து தற்போது பொதுக்குழு தீர்மான வழக்கிலும் தோல்வி அடைந்துவிட்டார். இப்படி அவர் தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

வழக்கு
இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம்.. எப்படி மீண்டும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்று தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம் ஓபிஎஸ். அதிமுக பொதுக்குழுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது. பொதுக்குழு தீர்மானங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் இதை எதையும் ஏற்கவில்லை. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அப்படி இருக்க தேர்தல் ஆணையம் மட்டுமே ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் ஒரே வழி.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் மூலம் எடப்பாடிக்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் முயன்று கொண்டு இருக்கிறார். ஆனால் இதற்கும் கூட டெல்லியின் அனுசரணை வேண்டும். இந்த நிலையில்தான் மோடி அல்லது அமித் ஷாவை சந்திக்கச் சொல்லி தனது மகன் ரவீந்திரநாத்திடம் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களை சந்திக்க ரவீந்திரநாத் முயற்சி எடுத்துள்ளார். அவர்களிடம் சந்திப்பு நடத்துங்கள். நமக்கு சப்போர்ட் செய்வார்களா என்று கேளுங்கள். அவர்களிடம் நாம்தான் நெருக்கமாக இருந்தோம். இப்போது நாம் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறோமே.

உத்தரவு
அதை பற்றி பேச சொல்லுங்கள், என்று ரவீந்திரநாத்திடம் ஓபிஎஸ் கேட்டுள்ளாராம். ஆனால், அவர்களிடமிருந்து புதன் கிழமை வரை அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. எப்போதும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டால் 1-2 நாட்களில் அப்பாயின்மென்ட் கிடைக்கும். ஆனால் இந்த முறை அப்படி ஓபிஎஸ் தரப்பிற்கு கிடைக்கவில்லையாம். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? என பாஜக எம்.பி.க்கள் மூலம் முயற்சிக்கிறாராம் ரவீந்திரநாத். தேர்தல் நேரம், ராகுல் காந்தி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மோடி, அமித் ஷா பிசியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை சந்திக்க முடியாது என்று பதில் வருவதாக கூறப்படுகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications