இனி இருக்க முடியாதுங்க! வெளியேறும் விலாங்கு மீன்? "அந்த" கட்சிக்கு தாவும் ஓபிஎஸ் ரைட் ஹேண்ட்! போச்சா
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில விஷயங்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியல் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து வருகிறார் ஓ பன்னீர்செல்வம். பொதுவாக சமாதானமாக போய் பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க போய் தற்போது இருந்ததும் போய் இல்லாமல் அமர்ந்து இருக்கிறார்.
வரிசையாக அரசியல் ரீதியாக கடந்த சில மாதங்களில் ஓ பன்னீர்செல்வம் பல தோல்விகளை சந்தித்துவிட்டார். அதிமுக பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்டது. பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது. அதன்பின் இரட்டை இலை சின்ன வழக்கில் தோல்வி அடைந்தது. பின்னர் பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்தது என்று ஓ பன்னீர்செல்வம் தொட்டதெல்லாம் கடந்த சில மாதங்களாக தோல்வியில்தான் முடிந்துள்ளது.

தோல்வி மேல் தோல்வி
இதெல்லாம் போக ஓ பன்னீர்செல்வத்திற்கு மேலும் ஷாக் கொடுக்கும் விதமாக பொதுக்குழு தீர்மான வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் நேற்று தோல்வி அடைந்தார். அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

பொதுச்செயலாளர்
அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிமுகவில் பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது தெளிவாகி உள்ளது. இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முடிந்தது
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்கள். இவருடன் இருந்தால் நமது அரசியல் எதிர்காலத்திற்கு சிக்கல் என்று அவருக்கு நெருக்கமான பலர் அப்செட்டில் இருக்கிறார்களாம். இதை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வத்திடம் நெருக்கமாக இருக்கும் இரண்டு, மூன்று நிர்வாகிகளை கூட தன் பக்கம் மொத்தமாக இழுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு உள்ளாராம். அதன்படி ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருக்கும் முக்கிய புள்ளி ஒருவருடன் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு போனில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்படி எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள். ஓ பன்னீர்செல்வத்துடன் இருப்பதால் உங்களுக்கு பலன் இல்லை. பேசாமல் எங்கள் டீமிற்கு வந்துவிடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓ பன்னீர்செல்வத்தின் " புள்ளியிடம்" பேசி இருக்கிறாராம்.

ரைட் ஹேண்ட்
ஓ பன்னீர்செல்வம் மீது கடந்த சில நாட்களாக அப்செட்டில் இருக்கும் அந்த நபரும் இந்த சான்சை பயன்படுத்திக்கொண்டு.. வெற்றிபெறுபவர்கள் பக்கம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறாராம். இது போக ஓ பன்னீர்செல்வத்தின் ரைட் ஹேண்டாக இருக்கும் இன்னொருவரை திமுக பக்கம் இழுக்கவும் திமுக அமைச்சர்கள் சிலர் முயன்று வருகிறார்களாம். அந்த ரைட் ஹேண்ட் புள்ளியை எடப்பாடி தரப்பில் மணியான சிலர் எதிர்ப்பதால் அவர் எடப்பாடி அணிக்கு செல்ல மாட்டார் என்றும் அதனால் அவர் திமுகவில் இணைவார் என்றும், டெல்டாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அந்த ரைட் ஹேண்டிடம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications