தென் மண்டலத்தை வலுவாக்க குறி.. "கொங்கு" டூ "தேனி".. 25 மா.செ.க்கள் தாவ ரெடியாமே? எப்போது தெரியுமா?
சென்னை: எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள மாவட்டச் செயலாளர்களில் 25 பேரை தட்டி தூக்க ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அவர்களும் சமயம் பார்த்து தாவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை எழுந்த நாள் முதல் அதிமுக அதிகபட்ச லைம்லைட்டிலேயே இருந்து வருகிறது.
தினந்தோறும் அதிமுகவில் ஒரு நிகழ்வு நடந்த வண்ணம் இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பை எடப்பாடி பழனிசாமி குறை கூறுவது, இவர்களை ஓபிஎஸ் விமர்சனம் செய்வது, ஆதரவாளர்களை பிடிப்பது என நடைபெறுகிறது.

உயர்நீதிமன்றம்
தற்போதைய நிலவரப்படி உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகியுள்ளதால் அவருடைய கை ஓங்கியுள்ளது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விசாரணைகள் நடந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு
இந்த தீர்ப்பு வருவதற்குள் எப்படியாவது தங்கள் பக்கம் வீக்னஸ்ஸாக உள்ள பலத்தை அதிகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் ஆர் பி உதயகுமாரின் வலதுகரமுமான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் பக்கம் தாவினர்.

எம்எல்ஏக்கள்
இன்னும் பல எம்எல்ஏக்கள் இந்த பக்கம் வருவார்கள் என ஓபிஎஸ்ஸும் ஐயப்பனும் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல் என்னிடமும் ஓபிஎஸ் தரப்பு விலை பேசினர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்துள்ளார். எனவே கூட்டத்தை சேர்க்க ஓபிஎஸ் தரப்பு தகிடுதத்தங்களை செய்து வருவதாகவே தெரிகிறது.

25 மாவட்டச் செயலாளர்கள்
அந்த வகையில் 25 மாவட்டச் செயலாளர்களை வளைக்கவும் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். குறிப்பாக தென் மண்டலத்தினரை குறி வைத்து இந்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அதாவது சொந்த மண்டலமான தென் பகுதியை வலுவாக்க ஓபிஎஸ் தரப்பு முனைப்பு காட்டி வருகிறதாம். இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பிடம் கேட்ட போது எங்கள் சார்பில் நாங்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுதான் எங்கள் அண்ணன் ஓபிஎஸ் அனைவரையும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளாரே.

பேச்சுவார்த்தை
அந்த அழைப்பை ஏற்றுத்தான் பலர் எங்கள் பக்கம் அணி மாறி வருகிறார்கள். ஒரு வேளை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எடப்பாடி தரப்பினர் எங்களை விமர்சிக்கும் அளவிற்கு என்ன தவறு இருக்கிறது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதை போல் அவர்கள் செய்த வேலையை நாங்கள் செய்கிறோம் அவ்வளவுதான் என்றார்கள். அதிமுகவில் கிட்டதட்ட 70 மாவட்டச் செயலாளர்கள் இருப்பதாக தெரிகிறது. அவர்களில் 6 அல்லது 7 பேர் ஓபிஎஸ் பக்கமும் மற்றவர்கள் எடப்பாடி பக்கமும் உள்ளனர். தங்களுக்கு ஆதரவு இல்லை ஆதரவு இல்லை என கூறும் எடப்பாடி தரப்பின் வாயை அடைக்க பாதிக்கு பாதி மாவட்டச் செயலாளர்களையாவது பெற்றிருக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறதாம். அதன்பேரில்தான் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அது போல் 35 எம்எல்ஏக்களையும் தங்கள் வசம் இழுக்க ஸ்கெட்ச் போட்டாச்சாம். எல்லாமே இபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரட்டும், பிறகு அணிமாறுதல்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications