ரஜினிகாந்த் சந்திப்பு கையோடு காஞ்சிபுரத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சி பயணம் இன்று தொடக்கம்!
சென்னை: அண்ணா திமுகவில் சட்டப் போராட்டம் நடத்தி தோல்வி அடைந்த அக்கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களை சந்திக்க (புரட்சி பயணம்) இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார். ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் இருந்து தமது பயணத்தை தொடங்குகிறார்.
அண்ணா திமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என எடப்பாடி பழனிசாமி அணி அறிவித்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகள் உச்சநீதிமன்றம் வரை நடைபெற்றது. தற்போதைய நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கைதான் ஓங்கி இருக்கிறது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் தமது ஆதரவாளர்களை சந்திக்க இன்று முதல் தமிழ்நாடு தழுவிய பயணத்தை மேற்கொள்கிறார் ஓ.பன்னீர்செல்வம். காஞ்சிபுரத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமது பயணத்தை தொடங்க உள்ளார்.
காஞ்சிபுரம் பொதுக் கூட்டத்தில் தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார் ஓ.பன்னீர்செல்வம். தமிழ்நாடு முழுவதுமான தமது சுற்று பயணத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என இச்சந்திப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த், அவரது பயணத்துக்கு வாழ்த்து மட்டும் தெரிவித்து அனுப்பி வைத்தார்.
முன்னதாக காஞ்சிபுரம் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் அண்ணா திமுக கட்சியை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இது தொடர்பாக உறுதியான எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications