வழி பொறந்தாச்சு.. அதிமுக கூட்டணியில் என்ட்ரி கொடுக்கும் ஓபிஎஸ்! அமித்ஷா டீலை முடித்த டிடிவி தினகரன்!
சென்னை: எடப்பாடியையும் மீறி ஒரு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது பாஜக. அதிமுகவிலும், கூட்டணியிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமே இல்லையென எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்க்கு இடம் கொடுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுவிட்டதாகவும், விரைவில் கூட்டணியில் ஓபிஎஸ் இணையும் நிகழ்வு நடக்கும் என்கின்றனர் அதிமுகவினர்.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தனது அணியை மேலும் பலப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக ஓ. பன்னீர் செல்வத்தின் அடுத்த அரசியல் நகர்வு மாறியுள்ளது.

ஓ பன்னீர்செல்வம்
அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி, தமிழக அரசியல் சூழலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதுவரை அதிமுக தலைமையுடன் நேரடியாக இணங்காமல் தனித்த அரசியல் பாதையில் பயணித்துவந்த ஓபிஎஸ், தற்போது மீண்டும் பழைய அரசியல் வட்டத்துக்குள் வர தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், அதிமுகவும் பாஜகவும் சமீப காலமாக பல கட்சிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளன. நீண்ட கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று ஆரம்பத்தில் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த டிடிவி தினகரன், இறுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது.
ஓ.பன்னீர்செல்வம் என்டிஏ
இந்தச் சூழலில்தான், ஓ. பன்னீர் செல்வத்தையும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. டிடிவி தினகரன் வெளிப்படையாகவே, "மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ் திமுகவுக்கு போக மாட்டார். அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர நினைத்தால், அவர் எங்களுடன் சேர வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக, அமமுக, பாஜக ஆகிய கட்சிகளால் வளர்க்கப்பட்ட அரசியல் பின்னணியுடையவர் ஓபிஎஸ் என்பதால், அவரது இடம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் சரியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
மேலும், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தொடர்பான அரசியல் ஊகங்களையும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக செங்கோட்டையன் நம்பியதாகவும், அதை அவர் முற்றிலும் மறுக்கவில்லை என்றும் தெரிவித்த தினகரன், இறுதியில் அதிமுக கூட்டணியில்தான் தனது பயணம் தொடரும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த கருத்துகள், ஓபிஎஸ் தொடர்பான அரசியல் நகர்வுகளுக்கும் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, சில மணி நேரங்களிலேயே ஓ. பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்தால், அவருடைய அணிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தனது சம்மதத்தையும் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
இதன் மூலம், 2026 தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ. பன்னீர் செல்வத்தின் இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் விரைவில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவார் என்ற கணிப்பு தமிழக அரசியல் களத்தில் தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
-
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா?












Click it and Unblock the Notifications