மதுரையில் "கபடி"ஆட போகும் எடப்பாடி.. எட்டி கூட பார்க்காதீங்க.. லாபியை களமிறக்கிய ஓபிஎஸ் - டிடிவி!
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு அதிமுகவினரை தயார்படுத்தும் விதமாக மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம்.. லோக்சபா தேர்தலுக்கு இனி தயாராக வேண்டியதுதான் என்று முழக்கம் செய்யும் விதமாக இந்த மாநாட்டை நடத்த எடப்பாடி முடிவு செய்துள்ளதாம். அதிமுக தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. அதோடு முக்கியமாக பிரதமர் மோடியை இந்த கூட்டத்தில் மேடை ஏற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அதோடு கூட்டணி கட்சி தலைவர்கள் 10 பேரை மேடைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.

எடப்பாடிக்கு செக் வைக்கும் முக்குலத்தோர்: எடப்பாடி பழனிசாமியின் இந்த மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் பிரிவினர் செல்ல கூடாது என்று லாபி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார்களாம்.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மேற்கு மண்டல ஜாதியினருக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார். ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி ஆகியோரை ஓரம்கட்டிவிட்டார். ஆர் பி உதயகுமாரை மட்டுமே வைத்துள்ளார். அவர் நடத்தும் மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று என்று லாபி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். இதை ஓ பன்னீர்செல்வம் எதிர்த்தார். முக்குலத்தோருக்கு எதிரானது இது ஓ பன்னீர்செல்வம் தடுக்க பார்த்தார். ஆனால் அதை மீறி எடப்பாடி பழனிசாமி இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அப்படி இருக்க அவரின் மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று என்று முக்குலத்தோரை அறிவுறுத்த ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முக்குலத்தோர் பிரிவிலிருக்கும் பல்வேறு ஜாதி சங்கங்களுடன் இவர்கள் பேச முடிவு செய்துள்ளாராம் . உங்கள் சங்கம் இதற்கு செல்ல கூடாது.
எடப்பாடிக்கு ஆதரவு தர கூடாது என்று லாபி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக மதுரையில் பெரிய அளவில் கூட்டத்தை கூட்ட எடப்பாடி திட்டமிடுகிறார். அவர் இதற்காக கொங்கில் இருந்து ஆட்களை கொண்டு வருவார். அந்த கூட்டத்தை தவிர மற்ற கூட்டம் எதுவும் எடப்பாடி மீட்டிங்கை எட்டி கூட பார்க்க கூடாது என்ற நிலையை ஏற்படுத்த ஓபிஎஸ் -டிடிவி தினகரன் ஆகியோர் பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications