டெல்லியில் அப்பாயின்மெண்ட் கேட்கும் ஓ.பன்னீர்செல்வம்! பாசிட்டிவ் சிக்னல் கிடைக்காததால் கலக்கம்!
சென்னை: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக மேலிட தலைவர்களை சந்திக்கும் திட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்னும் டெல்லியிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் எதுவும் வரவில்லை.
ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்புகளால் நிலை குலைந்து காணப்படும் ஓபிஎஸ்க்கு டெல்லியும் தன்னை ஓரங்கட்டுவது மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்தர நாத் டெல்லியில் முகாமிட்டபடியே தனது தந்தைக்காக சில லாபிகளை செய்து வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம்
எப்படி இருந்த நான் இப்படியாகிவிட்டேன் என்ற நடிகர் விவேக்கின் திரைப்பட வசனத்தை போல் எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்களும் தேநீர் கடைகள், சலூன் கடைகள், பேருந்துப் பயணங்கள் என பல இடங்களிலும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு காரணம் அண்மையில் வெளியான அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பேயாகும்.

ஓ.பி.எஸ். கூடாரம்
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் டீமில் இருந்து பலரும் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள். ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகுவதால் ஓ.பி.எஸ். கூடாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜக மேலிடத் தலைவர்களை நேரில் சந்தித்து பேசுவதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி அப்பாயிண்ட்மெண்ட்
பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டும் இன்னும் டெல்லியிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் எதுவும் வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தனது முயற்சிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறியடிப்பதால் ஓ.பன்னீர்செல்வம் கலக்கம் அடைந்திருக்கிறார். இதனிடையே தற்போதைய சூழலில் மனோஜ் பாண்டியன் ஒருவர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தின் போர்வாளாக இருந்து வருகிறார்.

அரசியல் லாபி
இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்தர நாத் டெல்லியில் முகாமிட்டபடியே தனது தந்தைக்காக சில லாபிகளை செய்து வருகிறார். ஆனால் அவர் செய்து வரும் லாபிகள் எதுவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications