விரைவில்.. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார்.. ‘வெட்டவெளிச்சம் ஆகிடுச்சு’.. மாஜி பரபரப்பு பேட்டி!
சென்னை : சபரீசன் - ஓபிஎஸ் சந்திப்பின் மூலம், ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது, ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை, என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கஸ்டாலினின் மருமகனுமான சபரீசனை சந்தித்து பேசினார். சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைப் பற்ற வைத்தன.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய சபரீசன் அதன் பிறகு அவருடன் தனிப்பட்ட முறையில் சிறிது நேரம் பேசியுள்ளார். சபரீசன் சி.எஸ்.கே ஜெர்சி, தொப்பி அணிந்தபடி ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதிமுகவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்தச் சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்- சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பூனைக்குட்டி வெளியே வந்தது... சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அதிமுக தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓபிஎஸ் திமுகவிடம் ஆதரவு கேட்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக தன்னைக் கைவிட்டு விட்டதால் திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என்றும் எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், "சபரீசன் - ஓபிஎஸ் சந்திப்பின் மூலம், ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார் ஓபிஎஸ். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக சபரீசனுடனான சந்திப்பின் மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுபவதிற்கில்லை." எனத் தெரிவித்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications