அண்ணாமலைக்காக இறங்கி அடித்த ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு மட்டுமல்ல.. பாஜகவினருக்கே செம்ம ட்விஸ்ட்
சென்னை: அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பேச்சு, எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கும். பாஜகவினருக்குமே ஓபிஎஸ் பிரஸ்மீட் ஆச்சர்த்தை தந்திருக்கிறது.
ஓபிஎஸ் அணியினர் அண்ணாமலையின் செயலை நியாயப்படுத்த வில்லை அது ஒன்று தான பாக்கி,.மற்றபடி அண்ணாமலைக்கு ஆதரவாகவே ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி பேசியது அதிமுகவினரையே திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.

பாஜக உடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு ஒ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்பட ஓபிஎஸ் அணியினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது, பாஜக உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக சொல்றீங்க.. அவங்க என்ன சொல்றாங்க.. உங்களை எதற்காக அணுகுகிறார்கள் என்று சொல்ல முடியுமா என்று செய்தியாளர் ஒருவர் ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வோம். பேச்சுவார்த்தை நடத்திய அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.
பாஜகவினர் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் பதில் அளித்து பேசுகையில், கடந்த ஒரு மாத காலமாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தினம் தோறும் எங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்றார். அப்போது செய்தியாளர்கள் அது யாருன்னு சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் பதில் அளிக்கையில், எங்களுடன் மத்திய தலைமையில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் டெல்லிக்கு சென்று ஜேபி நட்டாவையோ அல்லது அமித்ஷாவையோ சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், கூட்டணி என்பது உங்கள் தலைமையில் அமையுமா என்று கேட்டனர், அதற்கு ஓபிஎஸ் இது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். இதில் தேசிய அளவில் கட்சி நடத்துபவர்களே இந்தியாவை ஆள முடியும். பாஜக இரண்டு முறை ஆண்டிருக்கிறது. மூன்றாவது முறையும் ஆள்வதற்கான தகுதியையும் பெற்றிருக்கிறது. ஆகவே அவர்கள் தங்களது முடிவினை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அறிவிப்போம் என ஓபிஎஸ் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் பாஜக அதிமுக கூட்டணி முறிவு நாடகம் என்று திமுகவினர் சொல்கிறார்கள் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு இது நாடகமில்லை.. பாஜக 16 மாநிலங்களை ஆண்டு கொண்டிருக்கிற ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய தேசிய கட்சி.. என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பாரத பிரதமர் மோடியின் பக்கத்தில் (எடப்பாடி பழனிசாமியை) உட்கார வைத்துக் கொண்டு அதிமுக உடன் கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள்.
அப்படி அறிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையை தொடர் நம்பிக்கை துரோகமாக செய்து கொண்டிருப்பது யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ந்து நம்பிக்கை துரோக அரசியலை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அங்கு மீட்டிங்கில் பேசிவிட்டு வந்து, இங்கு தமிழ்நாட்டிற்கு நாங்கள் தான் தலைமை.. என எடப்பாடி சொல்லப்போய் தான் ஆரம்பித்தது இந்த பிரச்சனை என்றார்.
அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி அணியினர் டெல்லி பாஜக தலைமையிடம் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் கூறியதாக சொல்லப்பட்டது, அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் பதில் அளித்து பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றுங்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா இவர்கள்? அண்ணா திமுகவில் ஏற்பார்களா.. அப்புறம் எப்படி பாஜகவில் ஏற்பார்கள்.. தேசிய கட்சியில் உள்ளவர்களை மாநில கட்சியில் உள்ளவர்கள் மாற்றுங்கள் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது" என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலைக்காகவும் பாஜகவிற்காவும் ஓ பன்னீர்செல்வம் இன்று ஆதரவாக பேசிய பேச்சுக்கள் அதிமுகவினரை மட்டுமல்ல, பாஜகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பண்ருட்டியார் இன்று பேசும் போது, அண்ணாமலை அண்ணா குறித்து பேசியதில் உண்மை இல்லை என்று கூறிய போதும், அவர் திட்டமிட்டு அப்படி பேசவில்லை என்று அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தார். பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தொடருவதற்கு ஓபிஎஸ் அணியினர் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இன்றைய பிரஸ்மீட் இருந்தது.
மேலும் பாஜக தங்களை எப்படி நினைக்கிறது என்பதை அறிந்த பின்னரே பதில் அளிப்போம் என்று ஓபிஎஸ் தரப்பு அறிவித்திருப்பதன் பின்னணியை பார்த்தால் அவர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு அளிப்பதும் தெரியவந்துள்ளது. அதேநேரம் பாஜக என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பாரக்க வேண்டும்..ஓபிஎஸ் டிடிவி தினகரனை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜக யூகம் வகுக்குமா அல்லது எப்படி என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications