சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதை விடுங்க.. இதை பாருங்க.. கடைசியில் வரும் "அந்த" பன்ச்.. என்ன சொல்ல வருகிறார் ஓபிஎஸ்!

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.. அது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்த வீடியோவாகும். அதுதான் தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக் ஆகும்!

இந்த வீடியோவில் வழக்கம்போல் ஓபிஎஸ் ஒயிட் & ஒயிட்டில் இருக்கிறார்.. ஆனால் ஃபுல் மேக்கப்பில் பளிச்சென ஜொலிக்கிறார்.

முதல் காட்சியிலேயே, விவசாய மண்ணை தன் இரு கைகளாலும் அள்ளி எடுக்கிறார்.. "தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்" என்று பின்னணியில் பாட்டு ஒலிக்கிறது.. அந்த மண்ணை கீழே போட்டுவிட்டு, அப்படியே இரு கைகளையும் குவித்து வணங்குகிறார்..

பெண்கள்

பெண்கள்

அங்கே வயல்வெளியில் விவசாய பெண்கள் களையெடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அந்த பெண்களுக்கு தன் வணக்கத்தை ஓபிஎஸ் வைக்க, பதிலுக்கு அந்த பெண்களும் வணக்கம் சொல்லுகிறார்கள். "தமிழ் மக்களே உங்களை வணங்குகிறேன்" என்ற வரி ஒலிக்க, தென்னை மர தோட்டத் தொழிலாளர்களிடம் அன்புடன் ஓபிஎஸ் பேசுகிறார்..

ஜெயலலிதா

ஜெயலலிதா

"நற்றமிழே உன்னை வணங்குகிறேன்" என்ற வரிகள் ஒலிக்க, பள்ளி மாணவர்களின் தமிழ் பாட புத்தகத்தை எடுத்து பிரித்து படிக்கிறார் ஓபிஎஸ்.. "நாடெல்லாம் உங்களை வணங்குகிறேன்" என்று அடுத்த வரி ஒலிக்க, வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து கொள்கின்றன.. ஒரு பக்கம் ஜெயலலிதா, இன்னொரு பக்கம் எம்ஜிஆர் தோன்றுகிறார்கள்.

 சாதனைகள்

சாதனைகள்

கடைசியில்தான் அந்த முக்கியமான பஞ்ச் நமக்கு கேட்கிறது.. "பத்து ஆண்டுகளில் நூறாண்டு சாதனைகள்" என்ற வரிகளுடன் அந்த வீடியோ முடிகிறது.. முடியும்போதுதான் கடைசியாக, முதல்வர் எடப்பாடியார் போட்டோ தெரிகிறது... இந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

அறிவிப்பு

அறிவிப்பு

எல்லாம் சரி... இந்த விளம்பரம் இப்போது எதுக்காக என்றுதான் தெரியவில்லை.. ஒருவேளை தேர்தல் நெருங்குவதால், அதிமுக தரப்பில் இருந்து வந்த விளம்பரமா? என்றும் புரியவில்லை... அதேசமயம், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று ஓபிஎஸ்தான் அன்று பகிரங்கமாக அறிவித்தார்.. நடந்து முடிந்த பொதுக்குழுவிலும், "என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த அண்ணன் ஓபிஎஸ்ஸுக்கு என்னுடைய நன்றி" என்று எடப்பாடியாரும் நன்றிகளை நிறைய சொல்லிவிட்டார்.

 முதல்வர்

முதல்வர்

எனினும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார் என்பதை ஒரே முறை அறிவித்தவுடன், ஓபிஎஸ் அமைதியாகிவிட்டார்.. அதற்கு பிறகு அந்த பேச்சையே காணோம்.. இவர் அமைதியாகிவிடவும்தான் பாஜக, முதல்வர் வேட்பாளர் பிரச்சனையை ஆரம்பித்தது.. முதல்வர் சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கியபோதுகூட, ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தார் என்றும், அன்றைய தின நிகழ்ச்சிகளைகூட கேன்சல் செய்துவிட்டு பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார் என்றும்கூட செய்திகள் கசிந்தன.

குழப்பம்

குழப்பம்

இதற்கு பிறகு அடுத்த சில தினங்களிலேயே ஓபிஎஸ் தரப்பில் விளம்பரங்கள் வெளியாயின.. அதிலும், இதேபோன்ற அவரது 10 ஆண்டு கால சாதனைகள் சொல்லப்பட்டிருந்தன.. இப்போதும் இதுபோலவே ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.. இதில் இருந்து நாம் என்ன தெரிந்து கொள்வது? ஓபிஎஸ் மறுபடியும் சைலண்ட் யுத்தத்தை ஆரம்பிக்க போகிறாரா? எடப்படியார் முதல்வர் வேட்பாளர் கிடையாதா? அப்படியானால் வேறு யார்தான் முதல்வர் வேட்பாளர்? என்ற குழப்பம் ஏற்படுகிறது.. எப்படி பார்த்தாலும்சரி, ஓபிஎஸ்ஸின் அந்த 10 ஆண்டு கால சாதனையை நாம் தவறாமல் போற்றியே ஆக வேண்டும்.. அதில் மாற்று கருத்தும் நமக்கு கிஞ்சித்தும் இல்லை!

English summary
O Panneerselvams Video Viral goes on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X