சினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து!
சென்னை: நடிகர் அஜித் பிறந்த நாளையொட்டி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழின் முன்னணி சினிமா நடிகரான அஜித் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் மாநிலம் முழுக்க தீவிர கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அஜித்தை வாழ்த்தி ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

சினிமா பின்புலம்
"எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக
அஜித் பிறந்தநாளையொட்டி கடந்த வருடமும் பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதிமுகவுக்கு அஜித் ஆதரவாக இருப்பதாக எப்போதுமே ஒரு தோற்றம் உண்டு. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்காக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித், தன்னை வற்புறுத்தி அழைத்ததாகவும், விருப்பம் இல்லாதவர்களை விட்டுவிட வேண்டும் என்றும் பகிரங்கமாக வலியுறுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

நல்ல உறவு
அதேநேரம், ஜெயலலிதாவுக்கும் அஜித், ஷாலினிக்கும் நல்ல உறவு இருந்து வந்ததாக கூறப்படுவது உண்டு. ஜெயலலிதா மறைந்தபோது, அஜித் சென்னையில் இல்லை. வெளிநாட்டிலிருந்து திரும்பியதும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிகாலை சென்று அஞ்சலி செலுத்தியவர் அஜித் மற்றும் ஷாலினி.
|
அதிமுக நிலை
மேலும், அஜித்தின் திரையுலக போட்டியாளராக ரசிகர்களால் கருதப்படும், விஜய்க்கும், அதிமுகவுக்கும், தலைவா திரைப்படம் ரிலீஸ் காலத்தில் இருந்தே பெரும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டுள்ளது. அது சர்கார் திரைப்படம் வரை தொடர்ந்தது. இந்த நிலையில், முக்கிய அரசியல் தலைவர்களில் முதலாவதாக அஜித்திற்கு, ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications