பெரிய ட்விஸ்ட்.. டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ்.. உடன் சென்ற "மூத்த" தலைவர்.. அடுத்து என்ன!
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார், இதன் பின்னர் தமிழ்நாடு அரசியலில் பெரிய திருப்பங்கள் அரங்கேறலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா மறைந்த சமயத்தில் ஓபிஎஸ் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இருப்பினும், அடுத்து சசிகலாவிடம் முதல்வர் பதவி செல்லும் என்று கூறப்பட்டது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், தர்ம யுத்தத்தை நடத்த, மறுபுறம் சொத்துக் குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு வந்தது.

அதிமுக: இதனால் அப்போது சசிகலாவால் முதல்வராக முடியாமல் போனது. அவர் சிறைக்குச் சென்ற சமயத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி நேர் எதிராகத் தான் இருந்தனர். இருப்பினும், அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படவே இருவரும் ஒன்றாக கை கோர்த்தனர். எடப்பாடி முதல்வராகவும் ஓபிஎஸ் துணை முதல்வராகவும் இருந்தனர்.
கட்சியில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் இருந்தனர். அப்போதே இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் இருந்தாலும் ஆட்சியில் இருந்த சமயத்தில் அது வெளிப்படையாகத் தெரியவில்லை. இருப்பினும், தேர்தலில் தோல்வியடைந்தது முதலே பல விஷயங்களில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடங்கியது..
ஓபிஎஸ்: அதன்படி கடந்தாண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், விரைவிலேயே அவர் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது. இதனால் இப்போது ஒட்டுமொத்த கட்சியும் எடப்பாடிக்குக் கைவசம் சென்றுள்ளது.
இதனால் ஓபிஎஸ் தனது ஆளுமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். கட்சியில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் இப்போது எடப்பாடி பக்கமே உள்ள நிலையில், அவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துச் சிந்தித்து வந்தார்.
அதிமுகவில் இது அனைத்தும் நடந்து வந்த நிலையில், டிடிவி தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். இவர் தொடக்கம் முதலே திமுகவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளையும் தீவிரமாக விமர்சித்தே வந்தார்.

சந்திப்பு: இதனிடையே சில காலமாகவே டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இதற்கேற்ப இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம், அவர்களுடன் இணைந்து பயணிக்கவும் ரெடி என்றே கூறி வந்தார். இருப்பினும், அதற்கான நடவடிக்கை எதுவும் நடக்காமலேயே இருந்தது.
இந்தச் சூழலில் இன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் சென்றுள்ளார். டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பை தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications