சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நியாயம் கேட்பேன்.. நெஞ்சு ரணமாகிய ஓபிஎஸ்.. அப்படியே "பிளேட்டை" திருப்பி போட பிளான்.. என்ன ஆகுமோ?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் தான் புறக்கணிக்கப்பட்டு.. அவமானப்படுத்தப்பட்டதை வேறு விதமாக தொண்டர்களிடம் கொண்டு செல்ல ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் பெரிய பயண திட்டம் ஒன்றை வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.. அது என்ன பிளான்?

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மோசமாக அவதிக்கப்பட்டார். ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கொச்சையான வார்த்தைகளை சொல்லி எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸை விமர்சனம் செய்தனர். அதோடு அவர் மீது வாட்டர் பாட்டில் எல்லாம் தூக்கி வீசி எடப்பாடி ஆதரவாளர்கள் கடுமையாக அவமதிப்பு செய்தனர்.

அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்? அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்?

 என்ன செய்ய போகிறார்?

என்ன செய்ய போகிறார்?

இந்த நிலையில் நெஞ்செல்லாம் ரணமாக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் நேற்று முதல்நாள் டெல்லி சென்றார். அங்கு பாஜக நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய நிலையை விளக்கி இருக்கிறார். இன்று மாலை அவர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறார். இன்று இரவே தனது ஆதரவாளர்களுடன் அவர் சந்திப்பு நடத்த உள்ளார். ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய இருக்கிறாராம். இன்னொரு பக்கம் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம்.

தெற்கு புறக்கணிப்பு

தெற்கு புறக்கணிப்பு

சமீபத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு முன்பாக தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர் திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்தார். முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த, ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர் திடீரென எடப்பாடி பக்கம் சாய்ந்தனர். இவர்களை சந்தித்து ஆதரவு கேட்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளாராம். எப்படி என்னை விட்டு சென்றீர்கள்.. என்று சாதி ரீதியாக ஆதரவு கேட்க திட்டமிட்டு இருக்கிறாராம். சசிகலா மூலமாகவும் பிரஷர் கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.

மூத்த தலைகள் எடப்பாடி பக்கம்

மூத்த தலைகள் எடப்பாடி பக்கம்

அதிலும் சில முன்னாள் அமைச்சர்கள், ஓபிஎஸ் கேம்பில் இருந்த சில முக்குலத்தோர் தலைவர்கள் திடீரென எடப்பாடி பக்கம் சென்றுள்ளனர். அவர்களையும் சந்தித்து உருக்கமாக ஓபிஎஸ் பேச போகிறார்.. நியாயம் கேட்க இருக்கிறார் என்கிறார்கள். அரசியல் வியூகம் செட்டாகவில்லை என்பதால், செண்டிமெண்ட் அஸ்திரத்தை ஓபிஎஸ் கையில் எடுக்க போகிறாராம். அதிலும் ஓபிஎஸ் மோசமாக அவமதிக்கப்பட்டதை சில முக்குலத்தோர் தலைவர்கள் விரும்பவில்லையாம்.

Recommended Video

    சிரிப்போடு வந்த OPS! Delhi Hotel-ல் நடந்தது என்ன?
    ஆனால் முக்குலத்தோர் அப்செட்

    ஆனால் முக்குலத்தோர் அப்செட்

    கட்சியில் இடமில்லை என்றால் மோதி இருக்கலாம்.. எதிர்த்து இருக்கலாம்.. ஆனால் அவமானப்படுத்துவது எப்படி நியாயம் என்று சில முக்குலதோர் பிரிவு உள்ளூர் தலைகள் அப்செட்டில் இருக்கிறார்களாம். இவர்களைதான் சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு கேட்பார் என்கிறார்கள். இதற்காக ஓபிஎஸ் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த பயணம் தொடங்கும் என்கிறார்கள்.

    ஒதுக்குறாங்க - அவமானப்படுத்துறாங்க

    ஒதுக்குறாங்க - அவமானப்படுத்துறாங்க

    அடுத்த பொதுக்குழுவிற்கு முன்பாக தென் மாவட்டங்களில் நிலைமையை மாற்ற ஓபிஎஸ் முயன்று வருகிறார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக நம்ம "ஆட்களை" ஒதுக்குறாங்க - அவமானப்படுத்துறாங்க .. எனக்கு என்ன நடந்ததுன்னு பாருக்குறீங்களா என்று சாதி ரீதியாக பிளேட்டை திருப்ப ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள். இதனால் அதிமுகவில் சாதி மோதல் வெடிக்குமோ என்ற விவாதம் எழுந்துள்ளது. இதன் மூலம் தென் மாவட்ட ஆதரவை பெற்று.. அதை தனது ஆதரவு களமாக மாற்ற ஓபிஎஸ் பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    O Pannerselvam may meet South Tamil nadu leaders to get support in AIADMK. அதிமுகவில் தான் புறக்கணிக்கப்பட்டு.. அவமானப்படுத்தப்பட்டதை வேறு விதமாக தொண்டர்களிடம் கொண்டு செல்ல ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X