சசிகலாவை சந்தித்த ஓ.ராஜா.. ஓபிஎஸ் சகோதரர் என்றும் பார்க்காமல்.. அதிரடியாக நீக்கிய அதிமுக தலைமை
சென்னை: அதிமுகவிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓ ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் சேதுபதி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

உடன்பிறப்புகள்
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திட்டுள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அண்மைக்காலமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

சசிகலா
தேர்தல் தோல்விகளால் சசிகலா அதிமுகவை தலைமையேற்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சி தலைமை பொறுப்பில் இணைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ்ஸிடமே கொடுக்கப்பட்டது.

சசிகலா- ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா சந்திப்பு
இந்த நிலையில் ஓபிஎஸ் இதற்கு எதுவும் பதில் சொல்லாவிட்டாலும் அவர் முன்னிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் திருச்செந்தூர் சென்றிருந்த சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா நேரில் போய் சந்தித்தார்.
Recommended Video

எடப்பாடி தரப்பு அதிர்ச்சி
ஓபிஎஸ் வீட்டிலிருந்து சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம், ஓபிஎஸ் சகோதரர் சசிகலாவுடன் சந்திப்பு ஆகியவற்றால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய ஒரே காரணத்துக்காக அன்வர் ராஜா உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கிய ஓபிஎஸ் , தனது சகோதரரின் செயலுக்கு என்ன மாதிரியான எதிர்வினையாற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் சகோதரர் நீக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ்












Click it and Unblock the Notifications