சென்னை மேயரை அலட்சியப்படுத்திய அதிகாரிகள்! அரசு நிகழ்ச்சியில் வாட்ஸ் அப் -யூ டியூப் பார்த்த அவலம்!
சென்னை: சென்னை மேயர் பிரியா ராஜனை அலட்சியப்படுத்தும் விதமாக அவர் பங்கேற்று பேசிய அரசு நிகழ்ச்சியில் அதிகாரிகள் தங்களது போனில் வாட்ஸ் அப் -யூ டியூப் பார்த்த அவலம் அரங்கேறியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 11-வது மண்டலத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
ஒரு பக்கம் மேயரும், மாநகராட்சி ஆணையரும் மிக சீரியஸாக மக்கள் பணிகள் பற்றி பேசி வந்த நிலையில், மற்றொரு பக்கம் போனை நோண்டுவதில் பிஸியாக இருந்தார்கள் அதிகாரிகள்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி 11-வது மண்டலத்திற்கான ஆய்வுக்கூட்டம் போரூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் 11-வது மண்டலத்தை சேர்ந்த மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக மேயர் பிரியா ராஜனும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியும் உரையாற்றினர்.

போனில் வாட்ஸ் அப்
அவர்களது பேச்சு மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கு 'போர்' அடித்ததோ என்னவோ தெரியவில்லை, ஆளாளுக்கு தங்கள் கைகளில் உள்ள செல்போன்களை நோண்டி பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் வாட்ஸ் அப்பில் மும்முரமாகவும், சிலர் யூடியூப் வீடியோவை மியூட் செய்தும் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த அவலத்தை காண முடிந்தது. இன்னும் ஒரு சிலரோ அடிக்கடி எழுந்து செல்வதும் வருவதுமாக இருந்ததையும் காண முடிந்தது.

பொறுப்புடன் அமர்ந்து
இது போன்ற அதிகாரிகள், அலுவலர்களுக்கு மத்தியில் சில பொறுப்பான அதிகாரிகளையும் அங்கே காண முடிந்தது. மேயரும், மாநகராட்சி ஆணையரும் என்ன சொல்கிறார்கள் என்பதை பலரும் குறிப்பெடுத்தனர். இப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் உதவி செயற் பொறியாளர் ஒருவர் அமைச்சர் நேரு பேசிக்கொண்டிருக்கும் போது தனது போனை அடிக்கடி எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

சென்னை மேயர்
இதனால் டென்ஷனான அமைச்சர் நேரு அந்த இடத்திலேயே எல்லோரது முன்னிலையிலும் அந்த அதிகாரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். இதனிடையே சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் சற்று மென்மையான போக்கை கடை பிடித்து வருவதால் அதனை ஒரு சிலர் சாதகமாக பயன்படுத்துவதை அறிய முடிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications