"லாக்" செய்து "ரிலீஸ்" செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு.. டெல்லியில் பரபரப்பு
காங்கிரஸ் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து, மேலும் 5 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது... அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு, பிறகு உடனடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.... அந்த குடும்பத்தினரை ராகுல் காந்தி நேரில் சந்தித்து, சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதலும் சொன்னார்..
நிச்சயம் நீதி கிடைக்க துணை இருப்போம் என்றும் அவர்களுக்கு உறுதியளிப்போம் என்றார்.. அப்போது அந்த சிறுமியின் அம்மாவுடன் பேசியது தொடர்பான போட்டோவையும் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சிறுமி
அவ்வளவுதான்.. போக்ஸோ சட்டப்படி, பலாத்காரத்தால் பாதி்க்கப்பட்டச் சிறுமியின் போட்டோ, அவர் குடும்பத்தார், பெற்றோர் போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதோ, நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ சட்டப்படி குற்றமாகும்.. இது போக்ஸோ சட்டத்தின் விதிமுறை மீறலாகும்... என்றெல்லாம் சொல்லி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்கு லெட்டர் எழுதியது..

கண்டனம்
இதனால் ராகுல் அந்த ட்விட்டர் போட்டோவை உடனடியாக நீக்கினாலும், கடைசியில் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. அத்துடன் விடவில்லை.. ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது... அத்துடனும் விடவில்லை.. காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டமூத்த தலைவர்கள் 5 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு விட்டனவாம்.. இதை காங்கிரஸ் கட்சியே தெரிவித்துள்ளது.

5 பேர்
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்புத்துறையின் செயலாளர் வினித் பூனியா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், பொதுச்செயலாளருமான அஜய் மகான், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாக்கூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கம்
அனைத்து தவறுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் போராடுவதை தடுத்துவிடலாம் என மோடி நினைக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த 5 பேரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டரே தற்காலிகமாக முடக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவியது. இதனை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஃபேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது.. இந்த விவகாரம் பரபரப்பாக எதிரொலித்ததையடுத்து, உடனடியாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications