Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போன ஜென்ம பாவம்.. வாயை விட்டு வாங்கிக் கட்டும் மகாவிஷ்ணு! ஆக்சனில் இறங்கிய அன்பில்..3 நாளில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக்நகரில் ஆன்மிக பேச்சு என்ற பெயரில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய 'மாஜி’ ஸ்டாண்ட் அப் காமெடியன் மகா விஷ்ணு குறித்து விசாரிக்க சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து 3 நாட்களில் அறிக்கை அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பேசி வந்த மகாவிஷ்ணு தற்போது திடீரென ஆன்மீகவாதி அவதாரம் எடுத்திருக்கிறார். தனியாக ஆன்மீக போதனை வகுப்பு நடத்தி வரும் அவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாக கூறப்படுகிறது.

mahavishnu school education department anbil mahesh


மேலும் சித்த மருத்துவர் எனக் கூறி காயகல்ப மருந்துகளையும் அவர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் பெற்றுக் கொண்டு ஆன்மீக வகுப்பு என்ற பெயரில் அவர் கல்லாகட்டி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்மீகத் தேடல் வகுப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் மாணவ மாணவிகளின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி கண்களை மூட வைத்து பாடலை ஒழிக்க விட்டு அவர்களை அழ வைத்து இருக்கிறார்.

தொடர்ந்து ஹிப்னாடிசம் செய்தது போல மாணவிகள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். குறிப்பாக அவரது பேச்சு ஆன்மீகத்தை தவிர்த்து குறிப்பிட்ட மதத்தை உயர்த்தி பேசுவது போலவும், குறிப்பிட்ட சில மத கருத்துக்களை பரப்புவது போல இருந்தது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார். இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. மேலும் கல்வித் துறையின் முறையான அனுமதியின்றி வகுப்புகளில் ஆன்மீக போதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? இது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தெரிந்து தான் நடந்ததா? என கேள்வி எழுப்பியதோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனை தொடர்ந்து, இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியின் தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் என்னுடைய ஏரியாவில் என் ஆசிரியரை அவமானப்படுத்திய உன்னை சும்மா விடமாட்டேன் என ஆவேசமாக பேசினார். மேலும் இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். இது தொடர்பாக இரண்டு நாட்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு மூன்று நாட்களில் அறிக்கை அளிக்கப்படும் எனவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பஞ்சாபிகேசன், ஆசிரியர்கள் இந்த விவகாரத்தில் போராட்டம் உள்ளிட்ட எந்தவிதமான பிரச்சினையும் செய்யாமல் இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+