சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் நேரம் மாற்றம்? அதிகாரிகள் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளில் வேலை நேரம் என்பது ஒவ்வொரு ஊரிலும், ஒரு விதமாக இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வேறு மாதிரியும், மற்ற ஊர்களில் வேறுமாதிரியும் இருக்கிறது. இந்த சூழலில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளாக ஒள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரம் வேறுமாதிரி இருக்கும். இங்கு பொருட்களை வாங்குவது சற்றே எளிதாக இருக்கும். ஏனெனில் ரேஷன் கடைகளில் ஒரே நாளில் பொருட்களை போட்டுவிட்டு, ஒருவாரம் கடையை மூடிவிட முடியாது. மக்கள் அடிக்கடி வந்து கடைகள் எப்போதுதிறக்கும், எப்போது வாங்க முடியும் என்பதை கவனிக்கிறார்கள். அதேபோல் விழிப்புணர்வும் அதிகம். ரேஷன் கடை பணியாளர்களும், கூட்டம் ஏற்படாத அளவிற்கு கடைகளை அதிக அளவில் திறப்பார்கள், திறக்க முடியாத நிலை அல்லது வேறு கடைகளில் பணி அல்லது தாசில்தார் அலுவலகம் செல்கிறார்கள் என்றால், அதனை போர்டில் எழுதி போட்டுவிடுவார்கள். இதனால் மக்கள் அலைச்சல் இல்லாமலேயே பொருட்களை வாங்க முடிகிறது

Officials ordered to review the proposal to change ration shop operating hours in Chennai and Kanchipuram

இந்த சூழலில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லை.

எனவே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும். மாதத்தின் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் "இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+