Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சத்தியசோதனை”.. மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? இழப்பு என புலம்பும் எண்ணெய் நிறுவனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை எப்போது குறைக்கப்படும் என நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் டீசல் விலை உயர்த்தப்படாததால் தங்களுக்கு லிட்டருக்கு ரூ.3 இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் புலம்பி வருகிறார்களாம்.

பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது 100 முதல் 110 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர் விலையேற்றம் அத்தியாவசிய பொருட்கள் விலை, போக்குவரத்து கட்டணம் உயர்ந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே நிலை நீடித்து வருகிறது.

Oil companies said that they are facing lose on petrol, diesel sale

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமடைய செய்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததால் எண்ணெய் நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வருவதாக கூறப்படும் நிலையில் டீசல் விற்பனையால் அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 3 ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் புலம்பி வருகிறார்களாம். பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பங்கு இந்திய எண்ணெய் சந்தையில் 90 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த சுமார் 2 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் உள்ளன. 85 சதவீதம் இறக்குமதி இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் நிலையில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளதால் அதன் வருவாய் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது கச்சா எண்ணெய் விலை சா்வதேச அளவில் சரிந்தாலும் ரஷியா - உக்ரைன் போர் காரணமாக 14 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை சா்வதேச அளவில் அதிகரித்து வரும் நிலையில், விலை உயர்த்தப்படாததால் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 3 ரூபாய் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து உள்ளனவாம். அதேபோன்று பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் வருவாய் அளவும் சரிவடைந்து உள்ளதாக கூறுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் வட்டாரத்தில் எழுந்து இருக்கும் இந்த பேச்சு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+