Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓலா, ஊபர் பரிதாபங்கள்.. ஓட்டுநர்கள் அடாவடி! இதிலும் வட மாநிலத்தவர்கள் வரலாம் - எழுத்தாளர் பா.ராகவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்காக வாடகை ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் பயணிகளிடம் வெளிப்படையாகவே நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் கேட்பதாகவும், புக்கிங் செய்த பிறகு பயணத்தை ரத்து செய்ய சொல்லி பயணிகளை கட்டாயப்படுத்துவதாகவும் எழுத்தாளர் பா ராகவன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "ஓலா, ஊபர், ரேபிடோ என்று பல வாடகை வாகன நிறுவனங்கள் இருந்தாலும் பெரும்பாலும் வண்டி ஓட்டுநர்கள் அனைத்துக்கும் பொதுவானவர்களாகவே இருக்கிறார்கள். அதாவது இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டுவிடுகிறார்கள்.

Ola, Uber drivers asking additional charges for travel - Writer Pa Raghavan

ஒரு சவாரி முடியும் நேரத்தில் எந்த நிறுவனத்தில் இருந்து அடுத்த சவாரிக்கு அழைப்பு கிடைக்கிறதோ, அதை ஏற்றுக்கொண்டு மற்ற இரண்டையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அந்தச் சவாரி முடியும் நேரம் வேறொரு நிறுவனத்தில் இருந்து ஆர்டர் வருமானால் அதை ஏற்றுக்கொண்டு முந்தைய இரண்டையும் மூடி வைத்துவிடுவது. செய்யட்டும். இது அவர்கள் பிழைப்பு. அதில் தவறில்லை.

ஓட்டுநர்களின் அணுகுமுறை: சிக்கல் வேறொரு விஷயத்தில் உள்ளது. குரோம்பேட்டையில் இருந்து கோடம்பாக்கம் செல்ல வேண்டுமானால் ஊபர் ஆட்டோவில் 220 ரூபாய் காட்டும். இதே தொலைவை ஓலாவில் சென்றடைய 250 ரூபாய் ஆகும். ரேபிடோவில் நான் சென்றதில்லை என்பதால் அதன் ரேட் தெரியாது. நமது ஊபர் அழைப்பு ஒரு டிரைவருக்குச் சென்று சேர்ந்ததும் அவர் போன் செய்வார்.

அமௌண்ட் எவ்ள காட்டுது சார் என்று கேட்பார். நாம் 220 என்று சொன்னால், 250 கொடுத்தா வரேன் சார் என்பார். முடியாது என்றால் சரி கட் பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறார். அவர்கள் டிரைவர் அலாட் செய்தபின் நாம் கட் செய்தால் அதற்குத் தனியாக தண்டம் அழ வேண்டும். டிரைவரோ, வம்படியாகத் தான் கட் செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பார்.

கூடுதல் பணம்: நமக்குக் கிளம்பும் அவசரம் இருக்கும். நேரமாகிக்கொண்டிருக்கும். தலையெழுத்தே என்று கட் செய்துவிட்டு ஓலாவில் போட்டால், அதே டிரைவரோ அல்லது வேறு யாராவது ஒருவரோ கில்லியாக வந்து நின்றுவிடுகிறார். இந்தக் கூடுதல் பணத்தையும் கொடுத்துவிட்டு, முந்தைய ஆப்புக்கும் தண்டம் அழ வேண்டும். இது மட்டுமா என்றால் கிடையாது. சில மாதங்களாக ஊபர், ஓலா ஓட்டுநர்கள் இன்னார் அன்னார் என்றில்லாமல் அத்தனை பேருமே நிறுவனம் காட்டும் தொகைக்கு மேலே 'போட்டுக் கொடுக்க'ச் சொல்லி வற்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏதோ ஐந்து பத்து என்றால் சரி. 'அம்பது ரூவா போட்டுக் குடு சார்' என்று கூசாமல் கேட்கிறார்கள். மறுத்தால் போனை வைத்துவிடுவார். கட் செய்யவும் மாட்டார். இதனைப் படிக்கும் நமது புரட்சிகர நண்பர்கள் புகார் செய்யலாமே என்று ஆலோசனை சொல்வார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. எத்தனை புகார் செய்தாலும் எந்தப் பலனும் இராது என்பதே என் அனுபவம்.

வட மாநில ஓட்டுநர்கள்: முன்னொரு காலத்தில் வீதிக்கு வீதி ஆட்டோ ஸ்டாண்ட் வைத்து இயங்கிக்கொண்டிருந்தவர்கள் வாய் கூசாமல் அடாவடி ரேட் சொல்லத் தொடங்கியதன் விளைவாகத்தான் இந்தப் பெருநிறுவனங்கள் உள்ளே வந்தன. ஸ்டாண்ட் ஆட்டோக்களின் காலம் முடிவுக்கு வந்தது. அவர்கள் அனைவரும் இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளாகிப் போனார்கள். ஆனாலும் வீரத் தமிழர்கள் அல்லவா? மீண்டும் இப்போது தம் இயல்புக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

எனக்கென்னவோ ஓட்டல், கட்டுமானம் போன்ற துறைகளில் நடந்தது போல இப்பெரு நிறுவனங்களும் ஆட்டோ, டாக்சி ஓட்ட வட நாட்டிலிருந்து லாரியில் அள்ளிக்கொண்டு வந்து கொட்டப் போகிற நாள் வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. வடவர் ஆதிக்கம் போலவே நம்மவர் அட்டூழியங்களும் எல்லை மீறிக்கொண்டுதான் இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+