பழைய ஓய்வூதிய திட்டம்.. திமுகவை விடாத விஜய்.. சத்தம்மா.. வெரி ராங் அங்கிள்.. கூட்டம் வேட்டாக மாறுமா?
சென்னை: "நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள்; இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? என்று மதுரை மாநாட்டில் விஜய் பேசியிருக்கிறார். விஜய் சொல்லும்படி, இந்த கூட்டம் ஓட்டாக மாறுமா? ஆட்சியாளர்களுக்கான வேட்டாக மாறுமா?
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

அந்தவகையில் தவெக -வின் வருகையும், செயல்பாடுகளும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.. திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று செயற்குழுவில் நடிகர் விஜய் அறிவித்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது..
கடந்த காலங்களில் திமுக எதிர்ப்பு வாக்குகளை, அதிமுக, சீமான் இருவரும் பெற்றுவந்த நிலையில், இந்த முறை அவை யாவும் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கணித்து கூறுகிறார்கள்.
திமுக வாக்குக்கு குறி
அதாவது திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து விஜய்யின் அரசியல் மூவ் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிப்புகளை கூறுகிறார்கள்.
வழக்கமாக, திமுகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி பாஜகவுக்கம், பாஜகவின் எதிர்ப்பு வாக்குகளின் ஒரு பகுதி திமுகவுக்கும் செல்லும் நிலையில், இந்த இரு எதிர்ப்பு வாக்குகளில் விஜய் எவ்வளவு பெறப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய ஆர்வமாக உள்ளது.
அதேசமயம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டாது. அந்தவகையில், நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு வலையை விரிக்க துவங்கியிருக்கிறது தவெக.
பாயாசம் - திராவிட மாடல்
கடந்த முறை விஜய் நடத்தியிருந்த முதலாம் மாநாட்டில் திமுகவை மட்டுமே பிரதானமாக குறி வைத்து விஜய் பேசியிருந்தார்.. "அவங்க பாசிசம்னா, நீங்க என்ன பாயாசமா.? நீங்களும் அவங்களுக்கு ஒன்னும் சளச்சவங்க இல்ல. மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் அரசுனு சொல்லிட்டு மக்களை ஏமாத்துறீங்க. எங்களுக்கு எந்த சாயமும் நீங்க பூச வேண்டாம்.
திராவிட மாடல்னு சொல்லி., தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெயரை சொல்லி சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலகூட்டம் தான் நம்மளோட அரசியல் முதல் எதிர" என மாநாட்டு நிகழ்வில் விஜய் திமுக அரசை நேரடியாகவே பேசியிருந்தார்.
இன்று மதுரையில் நடந்துவரும் இரண்டாவது மாநாட்டிலும் நேரடியாகவே திமுகவை பிரதானமாக அட்டாக் செய்து பேசியிருக்கிறார்.
ஸ்டாலின் அங்கிள்
"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்.. பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள்?. வீட்டில் இருந்து வேலை போறவங்க, கல்லூரிக்கு போறவங்க, பள்ளிக்கு போறவங்க என எல்லாருக்கும் பாதுகாப்பு இருக்கா?
பெண்களுக்கு மட்டுமா பொய் வாக்குறுதிகள் கொடுத்தீங்க.. போதைப்பொருள் புழக்கத்தை குறைப்பேன்னு சொன்னீங்களே செய்தீர்களா? மக்களே நீங்க உண்மைய சொல்லுங்க, வாக்குறுதிகள் கொடுத்தாங்களே செய்தாங்களா? சத்தம்மா.. சொல்லுங்க.. மை டியர் அங்கிள்.. சத்தம் கேக்குதா.. இங்க பேசுற மக்களோட சத்தம் கேட்குதா" என்று விஜய் பேசிய பேச்சு இணையத்தில் வட்டமடிக்க துவங்கியிருக்கிறது.
எம்ஜிஆர் - அதிமுக
அதேபோல, தன்னுடைய முதல் மாநாட்டை விஜய் நடத்தியிருந்தபோது, மாநாட்டு மேடையின் உச்சியில், அண்ணா, எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டு, 'வரலாறு' திரும்புகிறது என்றும் எழுதப்பட்டிருந்தது..
இந்த வாசம் அன்று பேசுபொருளாக மாறியிருந்தது.. முக்கியமாக அதிமுகவின் கவனத்தையும் விஜய்யின் பேச்சு திருப்பியிருந்தது.. திமுக மட்டுமல்லாமல் அதிமுகவின் ஓட்டுக்களுக்கும் விஜய் குறி வைப்பது அப்பட்டமாக தெரிவதாக சலசலக்கப்பட்டது.
இன்றைய தினம் மதுரையில் நடந்துள்ள 2வது மாநாட்டிலும், எம்ஜிஆரை பற்றி விஜய் பேசியிருக்கிறார்.. "நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்தவுடன் ஒருவரை பற்றி தான் என் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அது யார் என்று உங்களுக்கும் தெரிந்து இருக்கும். சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி.. நமக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது புரட்சி தலைவர் எம்ஜிஆர் தான். அவரோடு பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று உருக்கமாக பேசியிருப்பதை அதிமுக உற்று கவனித்து வருகிறது.
இளைஞர்கள் வாக்குகள்
அதேபோல சீமான் ஓட்டுக்களுக்கும் விஜய் குறி வைத்து வருவதாக ஏற்கனவே ஒரு பேச்சு உள்ளது.. கடந்த முதல் மாநாட்டிலும், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் விஜயை ஆதரித்திருந்ததை காண முடிந்தது.. எனவே, எப்படியும் நாதக வாக்குகளிலும் சேதாரம் ஏற்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.. அதற்கேற்றவாறு இன்றைய தினம் மதுரை மாநாட்டில், "இளைஞர் - மாணவர் அதிகாரமளிப்பு தீர்மானம்" நிறைவேற்றப்பட்டுள்ளது, இளைஞர்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
விஜயகாந்த் ஓட்டு
கடந்தமுறை நடந்த முதல் மாநாட்டில், வடதமிழகத்தைச் சேர்ந்த பலரும் திரண்டிருந்தனர்.. அதிலும் தேமுதிக தொடங்கப்பட்டபோது எங்கிருந்து ஆதரவு தளம் வந்ததோ, அதே பகுதிகளில் இருந்துதான் தவெகவுக்கும் ஆதரவுக் கரம் நீண்டதை, அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்தன.
"எம்ஜிஆரை போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தது" என்று விஜய் பேசியதுமே அரங்கம் அதிர்வதை காண முடிந்தது..
பழைய ஓய்வூதியம்
அதேபோல, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசு மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.. சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கும் தன்னுடைய ஆதரவை தந்திருந்து, அறிக்கையும் வெளியிட்டிருந்தார் விஜய்.. இந்நிலையில் இன்றைய தினம் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்த தீர்மானத்தை தவெக நிறைவேற்றியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
தூய்மை பணியாளர்கள்
கடந்த வாரம் திமுக அரசு மீது தங்கள் அதிருப்தியை தூய்மைப்பணியாளர்கள் வெளியிட்டிருந்த நிலையில், இவர்களுக்கும் ஆதரவை தந்து அறிக்கையை வெளியிட்டிருதார் விஜய்.. இன்று தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சுருக்கமாக சொல்லப்போனால், விஜய்யின் பேச்சு முதல் தீர்மானம் வரை மொத்தமும் திமுகவுக்கு எதிரானதாகவே அமைந்திருப்பதாக தெரிகிறது. திமுக, நாம் தமிழர், அதிமுக, பாஜகவின் ஓட்டுக்களை விஜய்யால் எளிதில் பெற்று விடமுடியுமா? இன்றைய கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான்












Click it and Unblock the Notifications