பழைய பென்ஷன் திட்டத்தை தொடர என்ஜிஓ சங்கம் சூப்பர் ஐடியா.. ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவிடம் கருத்து
சென்னை: சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் குழுவினர், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.. அப்போது, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய, தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.. இந்நிலையில், என்ஜிஓ சங்க நிர்வாகிகள், அரசுக்கு நஷ்டம் ஏற்படாமல், பழைய பென்ஷன் திட்டத்தை எளிதாக எப்படி அமல்படுத்தலாம்? என்பது குறித்த யோசனையை ஓய்வூதிய திட்ட ஆய்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 1.4.2003 முதல் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை, அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் 22 ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன.

மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதை ஏற்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவேதான், சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
3 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுவானது, ஒன்பது மாதத்துக்குள் துன்னுடைய அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இந்த குழுவினர், 4 கட்டங்களாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்க முடிவெடுத்துள்ளனர்.
தொடரும் கருத்து கேட்பு கூட்டங்கள்
அதன்படி கருத்துக்கூட்டங்கள் ஒவ்வொன்றாக நடந்து வருகின்றன.. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் 2 பேர் வீதம் அனுமதிக்கப்பட்டு, 3 நிமிடங்கள் அவர்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன..
செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளிலும் அடுத்தகட்ட கருத்து கேட்பு கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது.. இதனிடையே, சமீபத்தில் இக்குழுவை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (NGO சங்கம்) நிர்வாகிகள் மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமையில் பொதுச் செயலாளர் தேசிங்குராஜன், துணைத் தலைவர் ஆலீஸ்ஷீலா, துணைத்தேர்தல் அலுவலர் பத்மினி, விழுப்புரம் மாவட்ட தலைவர் நாகராஜன் சந்தித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
என்ஜிஓ சொன்ன யோசனை
இதுகுறித்து மாநில தலைவர் மகேந்திர குமார் சொல்லும்போது, "தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தபிறகு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அலுவலர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதம் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மத்திய அரசு வழங்கும் 18.5 சதவீதத்தை மாதா மாதம், மாநில அரசே வழங்கி அதனை ஓய்வு பெறும் காலம் வரை தொடர்ந்து சேர்த்து வைக்க வேண்டும். ஓய்வு பெறும் காலத்தில் அந்த மொத்த தொகையையும், வட்டியுடன் சேர்த்தாலே, பழைய ஓய்வூதிய திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்தி விடலாம். இதனால் அரசுக்கும் நிதிச்சுமை ஏற்படாது..
சிறப்பு கால முறை ஊதியம்
பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். அரசு ஊழியர்களின் தலைமுறைக்கும் இது பாதுகாப்பு அளிப்பதால், உடனடியாக பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்... எங்களது இந்த கருத்தை, இக்குழுவானது அரசுக்கு பரிந்துரைத்து, செயல்படுத்த வேண்டும்.
அத்துடன், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோர், ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7800 நிர்ணயம் செய்ய வேண்டும்" என்றெல்லாம் தன்னுடைய ஆலோசனையை தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications