பழைய ஓய்வூதிய திட்டம் 23 ஆண்டுகளுக்கு மேலாக மறுப்பு.. அரசு ஊழியர்கள் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பழைய ஓய்வூதிய திட்டம் 23 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்பட்டு வருகிறது.. குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.இது போன்ற கோரிக்களை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் மாநில அளவில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டையில் பேட்டி அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் 45-வது ஆண்டு துவக்க விழா மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

Old Pension Scheme denied for over 23 years Government employees take a decisive step

பிரதான கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டம், கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அது வழங்கப்பட வேண்டும். இரண்டாவதாக, பென்ஷன் இல்லாத பணியாளர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக, குறைந்தபட்ச ஊதியம் என்பது நிர்ணயிக்கப்படாமலேயே நாடு சென்று கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தை நடத்தக்கூடிய அளவிற்கு ரூபாய் 25 ஆயிரம் குறையாமல் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல, குறைந்தபட்ச பென்ஷன் பத்தாயிரமாவது இருந்தால் தான் அவர்கள் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது.

சரியான எடையில், தரமான பொருள்களை அனைத்து மக்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டும். இன்று வரை அந்த நிலை ஏற்படவில்லை. எனவே எல்லோருக்கும் தரமான அரிசியை, சரியான எடையில் வழங்க வேண்டும்.

நான்காவதாக, டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வுகள் அளித்திருந்த போதிலும் கூட, அவர்கள் இன்று மிகக் கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, காலி பாட்டில்களை பெறுவது என்பது, பாட்டில்கள் விற்பதற்கான உழைப்பை விட கூடுதலான உழைப்பை செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். உடனடியாக காலி பாட்டில் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அந்த காலி பாட்டில் பிரச்சனைகளுக்காக போராடிய பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இது போன்ற முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற டிசம்பர் மாதத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், அதனோடு இணைக்கப்பட்டுள்ள சங்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து, மாநில அளவில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொடர்பான சில பிரச்சனைகள் ஓடுவதை பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இவ்விஷயத்தில் தலையிட்டு, ஒரு நல்ல சீரான நிலையை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு கூறினார். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+