"Old Regime vs New Regime.." வரியை சேமிக்க உண்மையிலேயே சிறந்த வழி என்ன.. எளிய விளக்கம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியூ ரெஜிம், ஓல்ட் ரெஜிம் இரண்டில் எது சிறந்தது.. எதை நாம் தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் வந்துவிட்டாலே வருமான வரி தாக்கல் செய்வது குறித்துத் தான் அனைவரும் யோசித்துக் கொண்டு இருப்பார்கள். எப்படி வருமான வரியைத் தாக்கல் செய்து வரியை மிச்சப்படுத்தலாம் என்பதே அவர்கள் யோசனையாக இருக்கும்.

Old Regime vs New Regime Which one is better for you explains expert Rajesh

மேலும், பலருக்கும் ஓல்ட் ரெஜிம் மற்றும் நியூ ரெஜிம் ஆகிய இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கும். இதற்குப் பிரபல பொருளாதார வல்லுநர் ராஜேஷ் விளக்கமளித்து இருக்கிறார்.

வருமான வரி: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நாம் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும். இதில் குறைந்தளவுக்கு மட்டும் எப்படி வரியைச் செலுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதே அனைவரது யோசனையாக இருக்கிறது. மேலும், பலருக்கும் ஓல்ட் ரெஜிமில் இருக்கலாமா.. அல்லது நியூ ரெஜிமிற்கு மாறலாமா என்பது குறித்த சந்தேகமும் இருக்கும். புதிய ரெஜிமில் வருமான வரி உச்சவரம்பு அதிகம் இருந்தாலும் அதில் வரியைச் சேமிக்கும் வழிகள் ரொம்பவே குறைவு. இதனால் பலரும் வரியை மிச்சப்படுத்த ஓல்ட் ரெஜிமையே தேர்வு செய்வார்கள்.

எது சிறந்தது: இதற்கிடையே இது குறித்து பொருளாதார வல்லுநர் ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கி இருக்கிறார். இது குறித்து நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ராஜேஷ், "வரியைச் சேமிப்பதற்காக முதலீடு செய்வதைவிட, நமது நலனுக்காக முதலீடு செய்வதே சிறந்தது. சேமிக்கவில்லையென்றால், வரி என்கிற பெயரில் அரசு, உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளும். அதற்காகச் சேமிக்காமல் இருப்பது நல்லதல்ல.

நியூ ரெஜிம் என்பது, அவர்களின் வேலையைக் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. அதில் போய் சிக்க வேண்டாம். ஓல்ட் ரெஜிமிலேயே இருங்கள். உங்களால் முடிந்தவரை அனைத்து பிரிவுகளிலும் அதிகபட்ச பணத்தை முதலீடு செய்யுங்கள். அந்த வகையில், குறைந்த பட்சம் உங்களுக்கான பணத்தையாவது சேமிப்பதை உறுதி செய்கிறீர்கள். நமது ஓய்வுக்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமென்பதற்காக நாம் தான் சேமிக்க வேண்டும்.

சேமிப்பு: தயவு செய்து, உங்கள் நலனிற்காக, உங்கள் குடும்ப நலனிற்காக, உங்களின்/உங்கள் குடும்பத்தின் வருங்கால மகிழ்ச்சிக்காக, சேமியுங்கள், முதலீடு செய்யுங்கள். வேறு யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதாவது ஓல்ட் ரெஜிம் என்பதை வரியைச் சேமிக்க நல்ல வழி என்றாலும் கூட, வரி பிடித்தம் செய்கிறார்களே என்பதை விட நமது எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்பதே அவரது கருத்தாகும்.

எளிய விளக்கம்: பழைய வரி முறையைத் தான் இப்போது மாத சம்பளம் வாங்கும் பலரும் தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால் இதன் கீழ் வருமான வரி செலுத்துவோர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம். அதில் வரி அதிகம், பல்வேறு முதலீடுகள் மூலம் அதற்கான வரிச் சலுகைகளை நாம் பெறலாம். 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட எளிமைப்படுத்தப்பட்ட வரி கட்டமைப்பு தான் நியூ ரெஜிம்.. இதில் வரி விகிதங்கள் குறைவு என்றாலும் வரி விலக்கு உள்ளிட்ட வரிச் சலுகைகளைப் பெற முடியாது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+