Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபீலிங்கா இருக்கு.. உணர்ச்சிவசப்பட்ட மாரியப்பன்.. முதல்வர் சொன்ன அந்த வார்த்தை.. ஏக்கத்திற்கு விடை?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை வைத்தார். பல வருடமாக தான் வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் அவர் சில நிமிடங்கள் பேசினார்.

Recommended Video

    Mariyappan Thangavelu முதல்வர் MK Stalin-னிடம் வைத்த கோரிக்கை | Oneindia Tamil

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி அசத்திய மாரியப்பன் அந்த தொடரில் தங்கம் வென்றார்.

    இதனால் இந்த முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா வந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    வரவேற்பு

    வரவேற்பு

    டெல்லி வந்த மாரியப்பன் தங்கவேலுவை நேரடியாக டெல்லி சென்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரவேற்பு கொடுத்தார். நேராக விமான நிலையம் சென்று மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தார். இதையடுத்து சென்னை வந்த மாரியப்பன் நேரடியாக அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். ஸ்டாலினை சந்தித்த மாரியப்பன் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இதில் அவர் வைத்த முக்கியமான கோரிக்கை அரசு வேலை.

    அரசு வேலை

    அரசு வேலை

    மாரியப்பன் தங்கவேலு கடந்த ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போதே அவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்று முந்தைய ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக குரூப் 1 பிரிவில் அவருக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 2016ல் இவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அப்போதைய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து அப்போதே உறுதி அளித்து இருந்தார்.

    வழங்கப்படவில்லை

    வழங்கப்படவில்லை

    ஆனால் அப்போது மாரியப்பன் தங்கவேலுவிற்கு வேலை கொடுக்கப்படவில்லை. அவருக்கு நிதி உதவி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. வேலை கிடைக்காத நிலையிலும் மாரியப்பன் மிக தீவிரமாக அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தயார் ஆனார். 2017ல் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அரசு எனக்கு வேலை கொடுப்பதாக உறுதி அளித்தது. ஆனால் வேலை கொடுக்கவில்லை என்று மாரியப்பன் தங்கவேலு கோரிக்கை வைத்து இருந்தார். அவருடன் பதக்கம் வென்ற மற்ற மாநில வீரர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை.

    நிறைவேறவில்லை

    நிறைவேறவில்லை

    பல முறை கோரிக்கை வைத்தும் அவருக்கு வேலை வாய்ப்பு மட்டும் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பல ஒலிம்பிக் வீரர்கள், தடகள வீரர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஹாக்கி வீரர் ஸ்ரீஜித் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது. கேரளாவை சேர்ந்தவர். ஆனாலும் இவர் தமிழ்நாடு ஹாக்கி அணியில் ஆடியவர் என்பதால் அவருக்கு சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்பட்டது. போட்டிபோட்டுக்கொண்டு இரண்டு மாநிலத்திலும் ஸ்ரீஜித்திற்கு உதவிகள் செய்யப்பட்டன.

    உதவி செய்யவில்லை

    உதவி செய்யவில்லை

    ஆனால் மாரியப்பன் தங்கவேலுவிற்கு மட்டும் உறுதி அளிக்கப்பட்டபடி வேலை கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததும் மாரியப்பன் தங்கவேலு தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார். பல வருடமாக தான் வைக்கும் கோரிக்கையை மீண்டும் முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக கூறினார். அப்போது மாரியப்பன் கையை பிடித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

    உருக்கம்

    உருக்கம்

    உனக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அரசு வேலையை உனக்கு கண்டிப்பாக கொடுப்பேன் என்று மாரியப்பன் வைத்த கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். இதனால் மாரியப்பனின் பல நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன், அரசு வேலை குறித்து கோரிக்கை வைத்தேன். மற்ற மாநிலங்களில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் எனக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை.

    வேலை இல்லை

    வேலை இல்லை

    முதல்வர் எனக்கு கண்டிப்பாக வேலை கொடுப்பேன் என்று குறிப்பிட்டார். எனக்கு தங்கம் வெல்ல முடியாதது கொஞ்சம் ஃபீலிங்காக இருந்தது. மழை வந்து ஜம்ப் பண்ண முடியாமல் போய்விட்டது. அடுத்த முறை கண்டிப்பாக நான் தங்கம் வெல்வேன். கிளாஸ் 1 வேலை வேண்டும் என்று கேட்டு இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு கண்டிப்பாக உதவி செய்வதாக கூறி இருக்கிறார் என்று மாரியப்பன் தங்கவேலு குறிப்பிட்டுள்ளார். இதனால் 5 வருடமாக அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிக் கொண்டு இருந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு விரைவில் வேலை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+