குட்நியூஸ்.. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனாவிற்கு இடையே ஒரே நம்பிக்கை.. இதை நோட் பண்ணீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் சில புள்ளி விவரங்கள் நம்பிக்கை அளிக்க கூடியதாக உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை தினசரி கேஸ்கள் 2000க்கும் கீழ்தான் பதிவாகி வந்தது. இந்த நிலையில் ஓமிக்ரான் கேஸ்கள் பரவ தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக தினசரி கேஸ்கள் 23 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி கேஸ்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகிக்கொண்டு இருக்கிறது.

 தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று கொரோனா காரணமாக 23989 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,31,007 ஆக உயர்ந்தது. அதேபோல் தினமும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 20 ஆயிரம் என்ற அளவில் தமிழ்நாட்டில் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 29,15,948 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 27,47,974 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் எத்தனை பேர்

சென்னையில் எத்தனை பேர்

தமிழ்நாட்டில் ஜீன் சோதனையின் அடிப்படையில் இதுவரை 231 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 144 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா கேஸ்கள் 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று சென்னையில் 8978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 54685 பேர் தற்போது சென்னையில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 2854 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டது. 14717 பேர் தற்போது செங்கல்பட்டில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

ஆனால்

ஆனால்

ஆனால் இதில் நம்பிக்கை அளிக்கும் ஒரே விஷயம் பலி எண்ணிக்கைதான். தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக ஏற்படும் பலி எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மரணங்கள் 30 என்ற எண்ணிக்கையை தாண்டவில்லை. என்னதான் கொரோனா கேஸ்கள் 23 ஆயிரத்தை தாண்டி பதிவானாலும் அதில் 10-26 பேர்தான் தினமும் பலியாகிறார்கள். இரண்டாம் அலையின் போது நிலைமை இப்படி இப்படி. இரண்டாம் அலையில் தினமும் 30 ஆயிரம் கேஸ்கள் பதிவானால், பலி எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருக்கும்.

 பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

ஆனால் இப்போது பலி எண்ணிக்கை 20க்கும் குறைவாக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் 11 பேர் பலியானார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 36,967 பேர் பலியாகி உள்ளனர். இந்த மூன்றாம் அலையில் பலி எண்ணிக்கை 11,15, 20, 25, 26, 11 என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்தாலும் பலி எண்ணிக்கை உயரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் ஓமிக்ரான் தீவிரமாக இல்லை என்று தெரியவருகிறது.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல்
     ஓமிக்ரான் கொரோனா

    ஓமிக்ரான் கொரோனா

    ஓமிக்ரான் ஏற்பட்டாலும் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுவது போன்ற சாதாரண அறிகுறிகள், லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகிறது. 2ம் அலையில் ஏற்பட்டது போன்ற மோசமான பாதிப்புகள் இந்த அலையில் ஏற்படவில்லை. இதனால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இல்லை. பலர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்கள். மைல்ட் கேஸ்கள்தான் என்பதால் பலி எண்ணிக்கையும் மிக மிக குறைவாகவே உள்ளது ஒரே நம்பிக்கையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+