ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணம் நிர்ணயம்.. சென்னை - திருச்சிக்கு ரேட் கேட்டாலே ‘ஷாக்’ ஆகிடுவீங்க!
சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசின் எஸ்.இ.டிசி பேருந்துகளில் சென்னை - திருச்சிக்கு ரூ.400க்கும் குறைவாக டிக்கெட் உள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,610 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறையை ஒட்டி, ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையே ஆம்னி பேருந்துகளில் மிக அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 120 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்தனர். அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பேருந்துகளை பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்தது. பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
தமிழ்நாடு அரசுடன் கலந்து பேசி வெளியிடப்பட்ட டிக்கெட் கட்டணத்திற்கும் குறைவாகவே ஆம்னி பஸ் டிக்கெட்டுகளை விற்று வருவதாக விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினரின் அதிகாரப்பூர்வ கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் 1,610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் 2430 ரூபாய்.
சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் 1,930 ரூபாய் - அதிகட்பட்ச கட்டணம் 3,070 ரூபாய்.
சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்ச கட்டணம் 2,050 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 3,310 ரூபாய்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2,380. அதிகபட்ச கட்டணம் ரூ. 3,920.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு குறைந்தபட்ச கட்டணம் 2320 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 3810 ரூபாய்
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2,610 ரூபாய் - அதிகபட்ச கட்டணம் ரூ. 4,340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 1650 ரூபாய்- அதிகபட்ச கட்டணம் 2500 ரூபாய் என தெரிவித்துள்ளனர்.
அரசே இந்த தொகையை வசூலிக்க ஒப்புதல் தந்துள்ள நிலையில் இதற்கும் குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக எழும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும், தீபாவளி நாளிலும் இதன் அடிப்படையில்தான் ஆம்னி பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்த மக்கள் -
நீ நல்லா 'சாப்பிட்டிருக்க'.. நான் இன்னும் சாப்பிடல.. கிளாம்பாக்கத்தில் அமைச்சர் பேசியது ஏன்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications