ஆம்னி பேருந்துகளிடம் அபராதம் வசூலிப்பதில்லை! லஞ்சம், மாமூல் என அதிகாரிகள் வழிப்பறி! ஓனர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரி வசூல் என்ற பெயரில் வாரத்திற்கு ரூ 40 ஆயிரம் வீதம் மாதத்திற்கு ரூ 1 லட்சம் என அதிகாரிகள் லஞ்ச வேட்டையில் ஈடுபடுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இதுவரை அதிக கட்டணம் வசூலித்ததாக எந்த ஆம்னி பேருந்துக்கும் அபராதம் விதிக்கவில்லை என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன.

omni bus tvk government

ஆனால் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி இதுவரை எந்த அதிகாரியும் ஆம்னி பேருந்துகளிடம் இருந்து முறையான அபராதத் தொகையை வசூலிக்கவில்லை. அதற்கு பதிலாக, அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சோதனை என்ற பெயரில் பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து மாமூல் வசூலித்து வருகிறார்கள்.

1 லட்சம் வரை வசூல்

ஒரு வாகனத்திற்கு வாரம் ரூ 40 ஆயிரம்,மாதத்திற்கு ரூ 1 லட்சம், 3 மாதத்திற்கு ரூ 3 லட்சம் என வரி வசூலிக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக வாகனங்கள் எந்தச் சிரமமும் இன்றி நிம்மதியாகச் சென்று வருகின்றன.

ஆனால் அண்டை மாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் வரும் போது செக் போஸ்ட்களில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் வாகனங்களை மறிக்கிறார்கள். இதனால் 3 மணி நேரம் காலதாமதமாகவே பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.

திராவிடக் கட்சி ஆட்சி

திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் என்ன மாதிரியான வழிப்பறிகள் நடந்தனவோ அதே நிலைதான் தவெக ஆட்சியிலும் தொடர்கிறது. மாதத்திற்கு ரூ 10 கோடிக்கும் அதிகமாக அரசுக்கு வரி செலுத்தும் சூழலில் ஆம்னி பேருந்துகளுக்கு மூன்று முரை வரி வசூலிக்கக் கூடாது என அமைச்சரிடம் முறையிட்டபோது அதிகாரிகள் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை.

இடைத்தேர்தலுக்கு பிறகு

இடைத்தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்கள். நாங்கள் பல கோடி போட்டு முதலீடு செய்து பேருந்துகளை இயக்குகிறோம். இவ்வளவு காலம் அரசிடம் இருந்து எந்த பிரதிபலனும் இல்லாமல் நாங்கள் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதிகாரிகள் வாகனங்களை நிறுத்துவதால் ஒவ்வொரு முறையும் 3 மணி நேரம் காலதாமதமாக பேருந்துகள் செல்கின்றன. ஆம்னி பேருந்துகளுக்கு டீசல் எவ்வளவு ஆகிறது. எவ்வளவு டோல்கேட், வாகன வரி எவ்வளவு என்பதை ஆய்வு செய்து நீங்களே (அதிகாரிகள்) கூட ஒரு கட்டணத்தை நிர்ணயுங்கள்.

பறிமுதல் செய்யப்படவில்லை

இதுவரை டிக்கெட் கட்டணம் அதிகம் என ஒரு வண்டி கூட பறிமுதல் செய்யப்படவில்லை, அபராதமும் வசூலிக்கப்படவில்லை. வாகனங்களில் அது இல்லை, இது இல்லை என வழிப்பறிதான் செய்கிறார்களே தவிர, இந்த ஆட்சியில் ஒரு மாற்றமும் இல்லை. அரசு என்னவோ லஞ்ச, லாவண்யம் இல்லாமல் ஆட்சியை நடத்த வேண்டும் என நினைக்கிறது. ஆனால் சில அதிகாரிகள் அதை கெடுக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். எனவே அந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை

ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறையை காரணம் காட்டி, பேருந்துகளில் வழக்கத்தை விட 4 அல்லது 5 மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பலர் குற்றம்சாட்டுகிறார்கள். அதிலும் தீபாவளி, பொங்கல் நேரங்களில் படுமோசமாக கட்டணக் கொள்ளை நடத்தப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் ஜெயபாண்டியன், இதுவரை கட்டணக் கொள்ளைக்காக எந்த பேருந்து மீதும் நடவடிக்கை எடுத்ததில்லை என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+