நாங்க வாங்குறோம்..! அரசு பஸ்ஸில் அப்படி சொல்ல.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை : அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஆம்னி பேருந்தில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசுப் பேருந்துகளில் வரும் 23ஆம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது 2000 ரூபாய் நோட்டுகள் பேருந்துகளில் வாங்க வேண்டாம் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து நடத்துனர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் செலுத்த இயலாத நிலை உள்ளதால், மே 23 முதல் அரசு பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தின் கணக்குத் துறை மேலாண் இயக்குநர், ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகள் 2000 ரூபாய் நோட்டிகளை வாங்கவுள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications