ஆம்னி பஸ்களால் சென்னையில் டிராபிக் ஜாம்! கிளாம்பாக்கம், முடிச்சூர் இருந்தும் இந்த நகருக்குள் ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆம்னி பஸ்கள் குறித்த கவலை மீண்டும் எழுந்துள்ளது.. காலை, மாலை முக்கிய நேரங்களில் சாலைகளில் வாகனங்கள் பெருகிவிடுவதால், முக்கிய சாலைகளில் டிராபிக் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பெரிய அளவிலான ஆம்னி பஸ்களும் நகர சாலைகளுக்குள் தொடர்ந்து வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசலுடன் பாதுகாப்பு குறித்த கவலையும் எழுந்துள்ளது.. இதையடுத்து முக்கிய கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள்.. வேலை, கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினமும் தாம்பரத்துக்கு வருபவர்கள்,

Omni Buses

இங்கிருந்து பஸ், ரயில்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கிறார்கள்.. இதனாலேயே இதனால் தாம்பரம் சுற்றுவட்டார சாலைகளில் நாள் முழுவதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.

சென்னை ஆம்னி பஸ்கள்

குறிப்பாக, டிராபிக் அதிகமாக நேரத்தில் பஸ்கள் சாலையில் வரும்போது மற்ற வாகனங்களுக்கு இடவசதி குறைவதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.. பொதுவாக ஆம்னி பஸ்கள் பார்ப்பதற்கு லாரிகளைப் போல பெரிய அளவில்தான் இருக்கும்.. இதனால் டிராபிக் அதிகமாக உள்ள நகர சாலைகளில் இயக்குவதற்கு குறிப்பிட்ட நேரங்களில் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பெரிய ஆம்னி பஸ்கள் என்பதால், அருகில் பைக்குகள், சைக்கிள்கள் சென்றாலும் டிரைவர்களால் எப்போதும் தெளிவாக கவனிக்க முடிவதில்லை.. இதுவும் சில சமயம் விபத்துக்கு காரணமாகி விடுகிறது.

ஹெட்லைட், அதிக ஹாரன்

போதாக்குறைக்கு சில ஆம்னி பஸ்களில், அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஹாரன்களை வைத்திருக்கிறார்கள்.. சில ஆம்னி பஸ்களில் அதிக வெளிச்சம் கொண்ட முகப்பு விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.. இப்படி வெளிச்சம், எதிரே வரும் டிரைவர்களின் பார்வையையும் பாதிக்கக்கூடும்.. இரவு நேரங்களில் இதனாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கவலைப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, சென்னை நகருக்குள் டிராபிக்கை குறைப்பதற்காகவே கிளாம்பாக்கம் பஸ் முனையம் கொண்டு வரப்பட்டுள்ளது.. அதேபோல, சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டிய முடிச்சூர் பகுதியில் ஆம்னி பஸ்களை நிறுத்தி, அங்கிருந்து இயக்குவதற்கான தனி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்கள் நெரிசல் நிறைந்த நகர சாலைகளுக்குள் தேவையில்லாமல் வரக்கூடாது என்பதற்காகத்தான் இது இடங்கள் ஒதுக்கப்பட்டு, அங்கிருந்து இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முடிச்சூர், கிளாம்பாக்கம்

ஆனால், ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்களும் டிரைவர்களும், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார நகர சாலைகள் வழியாகவே தொடர்ந்து பஸ்களை இயக்குகிறார்களாம்.. இதனால் தாம்பரம் மட்டுமல்லாமல் குரோம்பேட்டை, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை போன்ற பகுதிகளிலும் நெரிசல் மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த முக்கிய நகர சாலைகளில் ஆம்னி பஸ்கள் செல்வதற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், கிளாம்பாக்கம் மற்றும் முடிச்சூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ் நிறுவனங்கள் கட்டாயமாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெரிசல் ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, முன்கூட்டியே இதற்கான கட்டுப்பாடுகளை கொண்டு வருவது முக்கியம் என்கிறார்கள் பொதுமக்கள்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+