பொறி வைத்து பிடித்து.. விடாத சிவசங்கர்.. ஆம்னி பேருந்துகள் மீது ஆக்சன்.. பாய்ந்தது மாஸ் நடவடிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் கூடுதலாக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன. கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பூஜை விடுமுறை நாட்களின் போது கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்ததற்கு எதிராக 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைப்பற்றி சிறைபிடித்துள்ளனர்.

இப்படி அதிகாரிகள் மூலம் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் சமாதானம் செய்து கொண்டனர்.
தீபாவளிக்காக தற்போது ஊர் திரும்பிய 6 லட்சம் பயணிகள் மீண்டும் சென்னைக்கு திரும்ப முன்பதிவு செய்துள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு வெளியாகி உள்ளதால் மக்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு உள்ளே இயங்கும் தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் எப்போதும் போல இயங்குகின்றன. இதனால் தமிழ்நாடு உள்ளே பயணம் மேற்கொள்வதில் சிக்கல் இல்லை.
ஆம்னி பேருந்துகள்: தமிழ்நாட்டிற்கு உள்ளே ஆம்னி பேருந்துகள் சங்கம்.. அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. அரசு விதித்த கட்டண பிராக்கெட்டை ஏற்றுக்கொண்டு விட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் முன்பதிவுகளுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் 30% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது, கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம் விதிக்கப்படும், புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு குட் நியூஸ்: தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்த நிலையில் ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கூடுதலாக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி நாட்களில் ஆம்னி பேருந்துகள் சாதாரண கட்டணத்திலேயே இயங்கின. சில பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தன. கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் சிவசங்கர் விடாமல் இதை கண்காணித்து வந்தார். பேருந்து நிலையங்களிலேயே இருந்து நேரடியாக இதை கண்காணித்து வந்தார்.
இதன் விளைவாக நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இயக்கப்பட்டு வருவதாக ஆம்னி பேருந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உதாரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து செல்ல சாதாரண நாட்களில் 900-1500 வரை கட்டணம் இருக்கும். அதே கட்டணம்தான் இப்போதும் உள்ளது.
அதேபோல் சென்னை டூ கோவை செல்ல சாதாரண நாட்களில் 900-1500 வரை கட்டணம் இருக்கும். அதே கட்டணம்தான் இப்போதும் உள்ளது. பொதுவாக பண்டிகை நாட்களில் இது 3500 வரை கூட செல்லும். ஆனால் தீபாவளி நாட்களில் இந்த முறை ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் நிலையில் ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் அரசின் முடிவை ஏற்று செயல்பட்டு உள்ளது.
பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்த நிலையில், இந்த முடிவை ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் எடுத்துள்ளது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications