தீபாவளி பண்டிகை: நாளை முதல் ஆம்னி பேருந்துகள் தாம்பரம்- பெருங்களத்தூர் வரை இயக்கப்படாது!
சென்னை: சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்படுவதாக ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி நவம்பர் 13 ஆம் தேதி திங்கள்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதாவது கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் வேலை நிமித்தமாக சென்னையில் செட்டிலாகிவிட்டனர்.
இவர்கள் தீபாவளி, பொங்கல், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து 9ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னையிலிருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 4675 சிறப்பு பேருந்துகள் என 10,975 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வரும் 13 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதற்காக சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து அரசு விரைவு பேருந்துகளில் 1.20 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
அது போல் ஆம்னி பேருந்துகளிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை 5 சதவீதம் குறைத்துள்ளன. இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக பேருந்துகள் இயக்கப்படாது. இதுகுறித்து அந்த சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9, 10, 11 ஆம் தேதிகளில் தாம்பரம்- பெருங்களத்தூர் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.
காவல் துறையின் உத்தரவின்படி சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்றடையும்.
ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் ஆம்னி பேருந்து சம்பந்தமான புகார்களை 9043379664 என்ற சங்கத்தின் தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஆம்னி
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications