Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஓஎம்ஆர் - வேளச்சேரி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.. இதுதான் புதிய பாதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ பணிகள் காரணமாக ஓஎம்ஆர் சாலையில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் மார்ச் 16ம் தேதியான இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, சென்டர் முதல் பரங்கிமலை இரு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் துரத்திற்கு பயன்பாட்டில் இருக்கிறது. இந்த வழித்தடம் கோயம்பேடு திருமங்கலம் வழியாக ஒரு வழியும், பரங்கிமலை, சைதாபேட்டை வழியாக ஒரு வழியாகவும் உள்ளத.. சென்னை மெட்ரோ ரயில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 2016ம் ஆண்டுடன் தற்போது ஒப்பபிட்டால், பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை சுமார் 90 லட்சத்தை நெருங்கியிருக்கிறது.

OMR road traffic change on trial basis for one week due to chennai metro works

முதல் கட்ட மெட்ரோ ரயிலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

சென்னை மெட்ரோ 3வது வழித்தடம்: மாதவரம் முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிப்காட் 2வரை 45.4 கிமீ நீளத்திற்கு 3வது வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியிலும் பாதை செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

OMR road traffic change on trial basis for one week due to chennai metro works

சென்னை மெட்ரோ 4வது வழித்தடம்: சென்னையில் 4வது மெட்ரோ வழித்தடம் மெரினா கலங்கரை விளக்கம் முதல் - பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை அமைக்கப்படுகிறது. 26.09 கிமீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 16.02 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 10.07 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 28 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

சென்னையில் 5வது மெட்ரோ வழித்தடம், மாதவரம் பால் பண்ணை மற்றும் சோழிங்கநல்லூர் இடையே அமைகிறது. 44 .6 கிமீ தூரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்தில் 38.77 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 5.83 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 48 ரயில்கள் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. மாதவரம் முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிப்காட் 2வரை 45.4 கிமீ நீளத்திற்கு அமைக்கப்படும் வழித்தடம் ஐடி காரிடர் பகுதியான ஓஎம்ஆர் சாலையை கடந்து செல்கிறது. இந்த பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், அங்கு பல்வேறு மாற்றங்களை செய்து தான் பணிகளை விரைவுபடுத்தி வருகிறது சென்னை மெட்ரோ.

இதனிடையே நேற்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 16.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலது புறம் திரும்பி துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் நேராக சென்று துர்யா ஹோட்டல் முன் "யு" டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்குச் செல்லலாம்.

அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் மேலும் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் "யு" டர்ன் செய்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம் " இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+