On Grid Solar: ஆன் கிரிட் சோலாரை வைத்து மின் கட்டணத்தை ஜீரோவாக்குவது எப்படி? என்னென்ன நன்மைகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்-கிரிட் சோலார் மூலம் மின் கட்டணத்தை 'ஜீரோ' ஆக்குவது எப்படி? என்பதை பார்க்கலாம். மாதத்திற்கு எத்தனை யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு இந்த ஆன் கிரிட் சோலார் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து பாலு என்பவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகை இருக்கும் நிலையில், On-Grid Solar System அமைப்பது ஒரு மிகச்சிறந்த முதலீடு. இதன் மூலம் உங்கள் மின் கட்டணத்தை எப்படி 'ஜீரோ' நிலைக்குக் கொண்டு வரலாம் என்று பார்ப்போம்.

on grid solar

On-Grid Solar என்றால் என்ன?

இது நேரடியாக மின்வாரியத்துடன் #EB_Grid இணைந்து செயல்படும் சிஸ்டம். இதில் பேட்டரி கிடையாது, மாறாக மின்வாரியமே சேமிப்புத் தளமாக #Storage செயல்படும்.
* பகலில் உற்பத்தியாகும் உபரி மின்சாரம் Net Metering மூலம் EB-க்கு செல்லும்.
* இரவு நேரத்தில் EB-யிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
* மாத இறுதியில் நிகரப் பயன்பாட்டிற்கு #Difference மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

மின் கணக்கீடு (2 மாத சைக்கிள் - உதாரணமாக 4kW சிஸ்டம்)

* சோலார் உற்பத்தி: ~1040 யூனிட்கள் [2 மாதங்களுக்கு].
* வீட்டுப் பயன்பாடு: 1040 யூனிட்கள்.
* நிகரப் பயன்பாடு [Net Usage]: 0 யூனிட்கள்.
* அரசின் சலுகை: 100 யூனிட் இலவசம் அப்படியே தொடரும்.

மின் கட்டண ஒப்பீடு #BillComparison

பில்லிங் யூனிட்..👇
சோலார் இல்லாத போது = 940 யூனிட்
சோலார் அமைத்த பின் = 0 யூனிட்

தோராயக் கட்டணம்..👇
சோலார் இல்லாத போது ₹9k - ₹9,5k, சோலார் அமைத்த பின் ₹8k - ₹1,2k*

குறிப்பு: சோலார் அமைத்த பின் வரும் கட்டணத்தில் நிலையான கட்டணம் #FixedCharges மற்றும் நெட்வொர்க்கிங் கட்டணம் #NetworkingCharges ஆகியவை அடங்கும். [நாம் EB கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் இது]

மிக முக்கிய நன்மைகள்

* ஆயுட்காலம்: சோலார் பேனல்கள் 25 ஆண்டுகள் வரை உழைக்கும்.
* ROI: 3.5 முதல் 4 ஆண்டுகளில் முதலீடு திரும்பக் கிடைக்கும்.
* பராமரிப்பு: பேனலில் தூசு இருக்கும் பட்சத்தில் தண்ணீர் விட்டு கிளீன் செய்வது, வருடத்திற்கு ஒரு முறை அனைத்து எலக்ட்ரிக்கல் பொருள்களையும் லூஸ்கனைக்சன் செக் செய்வது மட்டும்,

மிக முக்கிய குறிப்பு ஆன்-கிரிட் இன்வெட்டர்களுக்கு EB சப்ளை தான் 'ரெஃபரன்ஸ்'. எனவே, Power Cut நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக (லைனில் வேலை செய்பவர்களின் பாதுகாப்பு) சோலார் உற்பத்தி தானாகவே நின்றுவிடும்.

மாதம் 300 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஆன்-கிரிட் சோலார் ஒரு வரப்பிரசாதம்! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+