சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் தடை.. மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: ஜூன் 11ம் தேதி இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
சென்னையில் மின் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் ஞாயிறு தவிர மற்ற எல்லா நாட்களிலும் நடைபெறும். சென்னையில் ஒவ்வொரு ஏரியாவாக பிரித்து இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படுவது வழக்கம்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தினசரி நடைபெறும் பராமரிப்பு பணிகள் குறித்தும், அதனால் எங்கெல்லாம் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும். மேலும் இந்த மின்வழித்தட பராமரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் மின்வாரியம், மின்தடை குறித்து பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கும். ஆன்லைனிலும் தெரிவிக்கும்.
அந்த வகையில் ஜூன் 10ம்தேதியான இன்று சென்னை, தாம்பரம் பகுதிகளில் ஏற்படும் மின் தடை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்லாவரம், கேகே நகர்,கீழ்கட்டளை , குரோம்பேட்டை பகுதிகளில் இன்று மின்தடை இருக்கும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைமின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11ம் தேதி: இன்றைய மின்தடை விவரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை
கே.கே.நகர்: என்.டி.படேல் சாலை, நேசம்மாள் நகர், பாலவிநாயகர் நகர், அபிராமி நகர், ஜெயராம் நகர், தேவி கருமாரி அம்மன் நகர், கோவர்தன் நகர், பெரு மாள்கோவில் தெரு, மந்தவெளி தெரு, வடவேணியம்மன் நகர்.
பல்லாவரம் (வெங்கடேசன் நகர், ஜீ.ஐ.எஸ்.அனகாபுத்தூர்): எம். ஜி.ஆர்.நகர் மெயின் ரோடு 1-வது மற்றும் 2-வது தெரு, ஞான நாயர் நகர், கவுரி அவென்யூ, பக்தவச்சலம் நகர், திருவள்ளுவர் பேட்டை,சாமுண்டீஸ்வரிநகர், சாந்திநகர், சத்யா நகர், புதுதம்பி நகர்.
பல்லாவரம் (நாகல்கேணி, கடப்பேரி): மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், தூர்கை அம்மன் தெரு, நிர்வாணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கிவ்ராஜ் பிளாட்ஸ், கங்கா தெரு, பாரதிதாசன் தெரு.
பல்லாவரம் (கீழ்கட்டளை): பஜனை கோவில் தெரு, ராஜாஜி நகர், எம்.அலகநாதபுரம், சித்ரா டவுன்சிப், ஜெயின் கிரின் ஏக்கர்ஸ் பகுதி, காமராஜ் நகர், லதிப் காலனி, பச்சையப்பன் காலனி, ரேணுகா நகர், கே.இ.ஹவுசிங், தர்கா ரோடு.
பல்லாவரம் (கணபதிபுரம், ராதாநகர்): கணபதிபுரம் மெயின் ரோடு, செல்வராஜ் தெரு, ஆனந்தராமன் தெரு, ராதா நகர் மெயின் ரோடு, இந்திரா காந்தி தெரு, கலைமகள் தெரு, இசக்கியம்மா தெரு, சந்திரசேகரன் தெரு, விவேகானந்தா தெரு.












Click it and Unblock the Notifications