பெரியார் பிறந்தநாள்.. ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி
சென்னை: திராவிட இயக்க தலைவரும் சமூக நீதி போராளியுமான தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள்.
சமூக நீதி போராளியான தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாக கடைபிடிப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த நாளில் சமூக நீதி காக்க உறுதிமொழி ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக பெரியார் பிறந்தநாளன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் இன்று சமூகநீதி நாள் உறுதி ஏற்பு நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், "தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்" என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு இணங்க, தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று (17.9.2023) காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications