திருஓணம் திருநாள் வந்தல்லோ... அத்தப்பூ கோலம் போட்டு மகாபலிக்கு வரவேற்பு கொடுத்த மக்கள்

திருவோணம் திருவிழா கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகையே உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. ஆண்டு தோறும் திருவோணம் திருவிழா நாளில் தனது மக்களை காண வருகிறார் மகாபலி மன்னர். தங்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வண்ண பூக்களால் கோலம் போட்டு வரவேற்பு கொடுக்கின்றனர் மலையாள மொழி பேசும் மக்கள்.

அஸ்தம் நாளில் தொடங்கிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கேரளா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் களைகட்டியுள்ளது. அத்தப்பூ கோலம் போட்டு விளக்கேற்றி நடனமாடி மகாபலி மன்னனுக்கு வரவேற்பு கொடுத்து உற்சாகமாக வீட்டிற்குள்ளேயே கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா காலம் என்றாலும் தங்களின் துயர் தீர்க்க தங்களை காண வரும் மகாபலிக்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை நாளில் அளிக்கும் வரவேற்பை இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வீட்டில் கோலம் போட்டு விளக்கேற்றி விருந்து படைத்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர் மலையாள மக்கள்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

அஸ்வினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இரு நட்சத்திரங்களுக்குத்தான் 'திரு' என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரம். மார்கழியில் இந்த நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இன்னொன்று பெருமாளுக்குரிய திருவோணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

பத்து நாட்கள் திருவிழா

பத்து நாட்கள் திருவிழா

கேரளாவில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வீட்டிற்குள்ளேயே பண்டிகையை கொண்டாடுங்கள் என்று கேரளா அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை வீட்டிற்குள்ளேயே கொண்டாடுகின்றனர்.

மகாபலி மன்னனுக்கு வரவேற்பு

மகாபலி மன்னனுக்கு வரவேற்பு

பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள்.

Recommended Video

    China's Dog Meat Festival-அமர்க்களம்..Corona பற்றி கவலையில்லை
    ஓணம் திருவிழா களைகட்டியது

    ஓணம் திருவிழா களைகட்டியது

    ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் குறிப்பாக கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் களைகட்டியுள்ளது. கொரோனா அச்சம் இருந்தாலும் வழக்கம் போல அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளில் மிகப்பெரிய விளக்கேற்றி வீட்டிற்குள்ளேயே நடனமாடியும் ஊஞ்சல் விளையாட்டுக்களை விளையாடியும் கொண்டாடி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+