புற்றுநோயை ரெண்டே நாட்களில் காலி செய்யும்.. அபூர்வ செடி! சாதித்து காட்டிய விஞ்ஞானிகள்!
சென்னை: மனித குலத்திற்கு மிகப்பெரிய சவால் புற்றுநோய்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த நோய் மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது இந்த நோயை கட்டுப்படுத்தி அழிக்கும் அதிசய செடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
'ஆன்கோடார்கெட்' (Oncotarget) எனப்படும் ஆய்வு இதழில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நம்மூரில் சாதாரணமாக ரோட்டு ஓரம் வளரும் தாத்தா செடியை (டான்டேலியன்-Dandelion) பார்த்திருப்போம். இதன் பூவை எடுத்து ஊதினால் அதுபாட்டுக்கு காற்றில் பறந்துக்கொண்டே இருக்கும்.

இதை செய்யாதீங்க
அந்த செடியின் வேரிலிருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட சாறுதான் புற்றுநோய் செல்களை அழித்திருக்கிறது. உடனே இந்த செடி எங்கிருக்கிறது என்று தேடி பிடித்து அதன் வேரை அரைத்து குடிப்பதோ.. அல்லது கிரீன் டீ மாதிரி சுடு தண்ணீரில் போட்டு குடிப்பதோ செய்ய வேண்டாம். அப்படி செய்தால், சொர்க்கத்தில் ஒரு சீட் போட வேண்டியது வரும். எனவே இந்த ஆய்வு என்ன சொல்கிறது என்பதை முழுமையாக படிக்கவும்.
விஞ்ஞானிகளின் ஆய்வு
வேலையற்ற விஞ்ஞானிகள் நாலு பேர் சேர்ந்து.. ஆய்வகத்தில் ஒரு எலியை வளர்த்திருக்கிறார்கள். அந்த எலிக்கு, மனிதர்களுக்கு வரும் குடல் புற்றுநோயை ஊசி போட்டு வர வைத்திருக்கிறார்கள். பின்னர் தாத்தா செடியை பிடுங்கி, அதிலிருந்து சாறை எடுத்து.. பலான.. பலான வேலையை செய்து சுத்தப்படுத்தி, அந்த எலிக்கு கொடுத்திருக்கிறார்கள். என்ன ஆச்சரியம்.. குவாட்டர் அடித்த புது குடிகாரரை போல எலி அங்கும் இங்கும் ஹாப்பியாக ஓடியிருக்கிறது.
ரெண்டே நாள்
ஆய்வு செய்ததில், எலியின் உடலில் இருந்த புற்றுநோய் செல்கள் 48 மணி நேரத்தில்.. அதாவது ரெண்டே நாட்களில் 90% வரை அழிக்கப்பட்டிருக்கிறது. அப்படியும் நம்ப மறுத்த விஞ்ஞானிகள், லேப்-ல் செயற்கையாக வளர்க்கப்பட்ட குடல் புற்றுநோய் செல்கள் மீது டெஸ்ட் செய்திருக்கிறார்கள். அங்கும் அதே ரிசல்ட் வரவே.. அடுத்தக்கட்ட சோதனைகளை செய்ய ரெடியாகிவிட்டனர்.
புற்றுநோய் செல்கள்
பாத்ரூம் கரையை போல புற்றுநோய் அவ்வளவு சீக்கிரத்தில் போகவே போகாது. அதை அழிப்பது ரொம்ப கஷ்டம். ஏனெனில், நாம ஒரு மருந்தை கொடுத்து அந்த செல்களை அழிக்க முயன்றால், புற்றுநோய் செல்கள் உஷாராகி நாம் கொடுக்கும் மருந்தை தாங்கும் அளவுக்கு சீக்கிரமாக வளர்ந்துவிடும். ஓட்டை குடத்தில் தண்ணீர் தூக்கும் கதைதான்.
ஆனால், இந்த தாத்தா செடியின் வேரில் உள்ள சில மூலக்கூறுகள் புற்றுநோய் செல்களை எல்லா பக்கமும் இருந்து அட்டாக் செய்யும். இதனால் இந்த செல்கள் உடனடியாக அழிந்துவிடுகின்றன.
சிக்கல் இருக்கு
இதிலும் சில சிக்கல்கல் இருக்கின்றன. லேப்-ல் வைத்து டெஸ்ட் செய்யப்படும் எல்லா மருந்துகளும் அப்படியே 100% மனிதர்களுக்கு செட் ஆகாது. 100ல் வெறும் 10 தான் செட் ஆகும். மீதமுள்ள 90 மருந்துகளை டெஸ்ட் செய்யப்படும்போது, மனிதர்கள் பரலோகம் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அல்லது சைடு எபெக்ட் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தாத்தா செடியை பார்த்தால்.. எடுத்து ஏடாகூடமாக எதையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
லேப் டெஸ்ட், கிளினிக்கள் ட்ரை முடிந்து, மருந்து அதிகாரப்பூர்வமாக வரும் வரை காத்திருக்க வேண்டும். மருந்து எப்போது மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதை தெரிந்துக்கொள்ள.. ஒன் இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள்.












Click it and Unblock the Notifications