கடலூர் அரசு பள்ளி கிளாஸ்ரூமில், எஸ்ஐ திருமாவளவன் முன்பு புள்ளிங்கோ ஸ்டைலை ஒட்ட நறுக்கி! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் அரசு பள்ளியில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. எப்போதுமே பொது இடங்களில் மாணவர்கள் கண்ணியமாக நடந்துகொள்வதும், சீருடை, தோற்றத்தில் நேர்த்தியாக இருப்பதும் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.. ஆனால், சில மாணவர்கள் அப்படி நடந்து கொள்வதில்லை.. இப்படிப்பட்ட மாணவர்களுக்குதான், கடலூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.. அது என்ன தெரியுமா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஒழுக்கத்தை நிலைநாட்ட ஆசிரியர் மேற்கொண்ட துணிச்சலான செயல் சோஷியல் மீடியாவில் பேசுபொருளானது..

Cuddalore Government School

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டபோது, சீரான முடி திருத்தம் செய்து வருமாறு மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் பழனி அட்வைஸ் தந்திருந்தார்.. ஆனாலும் சில மாணவர்கள் அந்த அட்வைஸை காதில் வாங்காமல், முடி திருத்தமும் செய்யாமல் பள்ளிக்கு வந்திருந்தனர்.

திருப்பத்தூர் ஆசிரியர் பழனி அட்வைஸ்

இதை பார்த்து அதிருப்தி அடைந்த ஆசிரியர் பழனி, மாணவர்களின் நலன் கருதி தனது சொந்தச் செலவிலேயே முடி திருத்தும் தொழிலாளர்களை பள்ளி வளாகத்திற்கே வரவழைத்து விட்டார்.. அங்கு உட்கார வைத்து மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்தார்.

ஒழுக்கத்தை வலியுறுத்துவதில் ஆசிரியர் காட்டிய இந்த ஈடுபாடு மற்றும் பொறுப்பான நடவடிக்கை, திருப்பத்தூர் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளதோடு, அரசுப் பள்ளி மாணவர்களின் சீர்மைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் மாறியது.

கடலூர் அரசு ஆண்கள் பள்ளி

இந்நிலையில் இதே போன்ற சம்பவம் ஒன்று கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருந்தனர். எப்போதுமே யூனிபார்ம் எப்படி கட்டாயமோ, அதுபோலவே தோற்றத்தில் கட்டுப்பாட்டுடன் வர வேண்டும் என்பது விதியாகும்.

ஆனால் இந்தப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள், விதவிதமான சிகை அலங்காரங்களுடன், "புள்ளிங்கோ" பாணியில் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர்கள் பலமுறை அறிவுறுத்தியும், மாணவர்கள் தங்களது ஸ்டைலை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. இதனால் பொறுமையிழந்த ஆசிரியர்கள், இறுதியாக அதிரடி முடிவெடுத்தனர்.

திருமாவளவன் அசத்தல்

பள்ளித் தலைமை ஆசிரியை செந்தாமரை செல்வி தலைமையில், ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து , நெடுஞ்சாலைத்துறை ரோந்துப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் உதவியை நாடியிருக்கிறார்கள்..

திருமாவளவனோ முடிதிருத்தம் செய்பவர்களை பள்ளிக்கே அழைத்து வந்துவிட்டார்.. ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் தலைமுடி அனைத்தும் ஒழுங்கான முறையில் வெட்டப்பட்டன. கிளாஸ் ரூமிலேயே இந்த அதிரடியை ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள்.

மாணவர்களின் ஒழுக்கத்தை நிலைநாட்ட ஆசிரியர்களும் போலீசாரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி மக்களிடையே எக்கச்சக்கமான வரவேற்பைப் பெற்றுள்ளது... படிப்போடு சேர்த்து கட்டுப்பாட்டையும் வளர்க்க ஆசிரியர்கள் எடுக்கும் இந்த முயற்சி, எதிர்கால தலைமுறையை சரியான பாதையில் கொண்டு செல்லும் என்று பெற்றோர்களும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+