காரில் கை வைக்கும் முன்பு.. ₹86 லட்சம் கட்டுங்கள்.. சிங்கப்பூரின் இந்த வினோதமான ரூல்ஸ் தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் என்றாலே பலருக்கும் அங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்களும், வாயை பிளக்க வைக்கும் ஏர்போர்ட்டும், சாலையில் பறக்கும் அதிநவீன கார்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த காரை வாங்க அங்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் தெரியுமா? ஒரு சிறிய காரை வாங்க கூட அங்கு ரூ.85 லட்சம் வரை செலவழிக்க வேண்டுமாம். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

தென்கிழக்கு ஆசியாவில் முக்கியமான நாடாக இருக்கும் சிங்கப்பூர் பல விஷயங்களுக்கு உலகில் புகழ்பெற்றது. பாதுகாப்பான நாடு, சக்திவாய்ந்த பாஸ்போர்ட், சுத்தமான நகரம் என பல விஷயங்களுக்குச் சிங்கப்பூர் உலகளவில் பேமஸான ஒன்றாகவே இருந்து வருகிறது.

Singapore car offbeat

சிங்கப்பூர்

இப்படி சிங்கப்பூர் பல சிறப்புகளை கொண்டிருந்தாலும் கூட உலகிலேயே கார் வாங்குவதற்கு அதிக செலவாகும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது. உதாரணமாக இப்போது நீங்கள் ஒரு சிறிய கார் வாங்க நினைக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அதற்கு கூட கிட்டத்தட்ட 1 லட்சம் அமெரிக்க டாலர், அதாவது சுமார் ரூ.85 லட்சம் செலவாகும். இது சொகுசு காருக்கான செலவு இல்லை. சாதாரண சின்ன காருக்கான செலவு!

அங்கு காரின் விலை கம்மி தான் என்றாலும், அதை வாங்குவதற்கு கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய சிஓஇ அதாவது Certificate of Entitlement வாகன உரிமைச் சான்றிதழ் விலை உச்சத்திற்கு போய் இருப்பதே இதற்கு காரணம். இந்த சிஓஇ சான்றிதழ் இந்தளவுக்கு உச்சத்திற்கு போய் இருப்பது இதுவே முதல்முறையாகும்.

அதென்ன சிஓஇ

சிங்கப்பூர் சாலைகளில் டிராபிக் நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு பின்பற்றும் முறை தான் இந்த சிஓஇ சான்றிதழ். இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஒருவரால் கார் வாங்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட COEகள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், அவையும் ஏல முறையிலேயே வழங்கப்படும். கடந்த ஜூலை 8ம் தேதி நடந்த ஏலத்தில் 1.6 லிட்டருக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட சிறிய கார்களுக்கான COE விலை 1.29 லட்சம் சிங்கப்பூர் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.86 லட்சம் ஆகும்

ரொம்ப காஸ்ட்லி

இவ்வளவு செலவழித்து COE வாங்கினாலும் ஒரே ஒரு காரை மட்டுமே வாங்க முடியும். அதையும் கூட ஒருவரால் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். கொரோனாவுக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடும்போது, சிறிய கார்களுக்கான COE விலை தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு கூட இது 1.02 லட்சம் சிங்கப்பூர் டாலராக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் அது கிட்டத்தட்ட 1.3 லட்சம் சிங்கப்பூர் டாலரை தொட்டுள்ளது.

சிங்கப்பூரில் இப்போது COEயின் விலை என்பது அமெரிக்காவில் 4 டொயோட்டா கொரோலா காரை வாங்கும் செலவுக்கு சமமாக உள்ளது. அதாவது கார் வாங்கும் முன்பே உரிமைச் சான்றிதழுக்காக பெரும் தொகை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

வீடே வாங்கிடலாம்

சிங்கப்பூரில் ஒரு குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 1.49 லட்சம் சிங்கப்பூர் டாலர் மட்டுமே. மேலும், அங்கு அரசு மானியத்துடன் வழங்கப்படும் சிறிய வீடுகளின் ஆரம்ப விலையும் சுமார் 1.39 லட்சம் சிங்கப்பூர் டாலராக உள்ளது. அதாவது நீங்கள் ஒரு வீட்டின் விலையை கொடுத்து அங்கு கார் வாங்க வேண்டிய சூழலே இருக்கிறது.

சுமார் 61 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் சிங்கப்பூரில் உங்களால் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிட முடியும். நிலப்பரப்பு இவ்வளவு குறைவாக இருப்பதால், சாலைகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவே அரசு இந்த COEஐ பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+