நாளை ஆடி 1! Aadi மாதத்தில் புதிய வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்யலாமா? வாடகை வீட்டில் குடியேறலாமா?
சென்னை: ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா, பால் காய்ச்சலாமா என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கும். இதுகுறித்து ஜோதிட ரீதியில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக புதிய வீட்டிற்கு பால் காய்ச்சுதல், கிரகபிரவேசம் செய்தல் உள்ளிட்டவைகளை நல்ல நாள், நேரம் பார்த்து செய்வதுண்டு. அப்போதுதான் நாம் செல்லும் வீட்டில் நமக்கு பொருளாதார வளர்ச்சி, குடும்ப சுபிக்ஷம் ஏற்படும்.

அதிலும் குறிப்பிட்ட தமிழ் மாதங்களில் சுபவிசேஷங்களை வைக்கக் கூடாது என்று ஒரு நியதி உள்ளது. அதிலும் ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டில் குடியேறலாமா, கிரகபிரவேசம் செய்யலாமா என்ற சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்தை இந்த பதிவின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஆனி மாதம் என்பது இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆனியில் சொந்த வீட்டில் கிரகபிரவேசம் செய்வதோ அல்லது புது வீட்டை கட்டவோ தொடங்கக் கூடாது. இதற்கு காரணமாக மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து பாதாளத்திற்கு சென்றது ஆனி மாதத்தில் என்கிறார்கள்.
அது போல் வாடகை வீடு என்ற பட்சத்தில் அவசரத் தேவைக்காக நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து பால் காய்ச்சி குடியேறலாம். கூடுமானவரை தவிர்க்கலாம். ஆனால் பலருக்கு டிரான்ஸ்பர், வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு வருவது உள்ளிட்ட காரணங்களால் வேறு ஒரு வாடகை வீட்டிற்கு குடிபோக வேண்டும் என்றால் ஆனியில் செல்லாமல் இருப்பது நல்லது.
அது போல் நாளை ஆடி பிறக்கும் நிலையில் சுப காரியங்கள் செய்யலாமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுவது தட்சிணாயன காலம் என சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் யாரும் சுப நிகழ்ச்சிகளை செய்வதில்லை.
ஆனால் ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்கு. ஆடி மாதத்தில் வரும் ஆடி 18 ஆம் தேதி நல்ல நேரம் பார்த்து வீடு கிரகபிரவேசம் செய்யலாம். பால் காய்ச்சி குடியேறலாம்.
ஆடி, புரட்டாசி, மார்கழி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். கோவில்களில் விழாக்கள் களைகட்டும். அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதம், நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். மார்கழி மாதம் தனுர் மாதம் வழிபாட்டிற்கு உரிய மாதங்களாக கூறப்பட்டுள்ளது.
அது போல் பங்குனி மாதத்திலும் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யக் கூடாது. சித்திரையில் கத்தரி வெயிலிலும் வீடு மாறக் கூடாது.













Click it and Unblock the Notifications