Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளே புகுந்து கேம் ஆடிய தேர்தல் ஆணையம்.. பதறிய இபிஎஸ்.. நடுங்கிய ஓபிஎஸ்! எல்லாம் அப்பாவு கையில்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக உட்கட்சி மோதல் கைகலப்பாக மாறும் அளவிற்கு, நிலைமை கைமீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. யார் எங்கே உட்காருவது என்ற இருப்பிட பிரச்சனை காரணமாக அதிமுகவில் இரண்டு தரப்பும் கடுமையாக மோதிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் அப்பாவு விரைவில் சட்டசபை தேதிகளை அறிவிக்க உள்ளார். இதற்கு இடையே அதிமுக உட்கட்சி மோதல் இன்னொரு பக்கம் நடந்து வருகிறது.

ஜனவரி 4ம் தேதி இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடக்க உள்ளது. இப்போதைக்கு இந்த வழக்கில் தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. அதற்குள் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்த சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்னதாக இரண்டு பிரச்சனைகளில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் சபாநாயகர் அப்பாவுவிற்கு உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் தற்போது இருக்கை விவகாரம் கவனம் பெற்று உள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி இருந்தது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை


தமிழ்நாடு சட்டசபையில் கடந்த முறை, அக்டோபர் மாதம் கூட்டம் கூடிய போது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாருக்கு அந்த இருக்கை அளிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி இருக்கையில் அமராமல், ஒரு நிமிடம் இருந்துவிட்டு அதன்பின் அவைக்கு நடுவே வந்து தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது.

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு இதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றாலும் அப்போதே இது தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார். அதில், ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். இப்போதே அறிவிக்க முடியாது. இரண்டு பேருமே மூத்த தலைவர்கள். இரண்டு பேருமே ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

என்ன முடிவு

என்ன முடிவு

அப்போது 2 நாட்கள் மட்டுமே அவை கூடியதால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்காமல் அடங்கியது. ஆனால் இந்த முறை ஒரு வாரத்திற்கு மேல் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபையில் இந்த முறை ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிர்கட்சித் துணை தலைவர் இருக்கை அளிக்கப்படுமா? ஆர்.பி உதயகுமாரை எதிர்கட்சித் துணை தலைவராக அப்பாவு ஏற்றுக்கொள்வாரா? என்ற இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி ஓபிஎஸ் இன்னும் அதிமுக உறுப்பினர்தான். அவர் இன்னும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றுதான் தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது.

 தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

குறிப்பாக புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+