ஜோசியம் பார்ப்பதில் விஜயகாந்துக்கு ஆர்வம்! அலங்காநல்லூரில் ஆஸ்தான ஜோதிடர்! கேப்டனின் மதுரை காலம்!
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஜோசியம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாக அவருக்கு முதல்முறையாக சினிமா ஸ்டில்ஸ் எடுத்துக் கொடுத்த மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆசைத்தம்பி கூறியிருக்கிறார்.
அலங்காநல்லூரில் சுந்தர ஆனந்த் என்ற ஜோதிடர் அப்போது இருந்ததாகவும் அவரிடம் கேட்ட பிறகே விஜயகாந்த் சினிமா தொடர்பான ஒவ்வொரு முடிவையும் எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். படம் பூஜை போடுவது முதல் எல்லா விவகாரங்கள் குறித்தும் அலங்காநல்லூரில் இருந்த ஆஸ்தான ஜோதிடரிடம் விஜயகாந்த் கலந்து பேசுவார் எனவும் கூறினார். இதெல்லாம் நடந்தது விஜயகாந்தின் ஆரம்பக்கால சினிமா நாட்களில் என்றும் அதன் பிறகு அவர் பிஸியாகிவிட்டதால் அவர் மதுரைக்கு எப்போதாவது வரத் தொடங்கியதாக ஃபிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார் போட்டோகிராபர் ஆசைத்தம்பி.

ஸ்டூடியாவுக்குள் வந்தால் சிகெரெட் பிடிக்கக்கூடாது என தாம் கூறியதை விஜயகாந்த் கேட்டுக்கொள்வார் என்றும் இரவு 10 மணிக்கு போட்டோ ஷூட் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறினால் மாலை 6 மணிக்கே விஜயகாந்த் ஸ்டூடியோவில் வந்து அமர்ந்துக்கொள்வார் எனவும் அது ஒரு காலம் என்றும் பழைய நினைவலைகளை ஓட விட்டார் ராசி ஸ்டூடியோ புகைப்பட கலைஞர் ஆசைத்தம்பி.
தன்னிடம் சினிமா ஸ்டில்ஸ் எடுப்பதற்கு முன்னர் விஜயகாந்த் வேறு யாரிடமோ எடுத்தார் என்றும் அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதால் மதுரையை சேர்ந்த பிரபல திரைப்பட விநியோகஸ்தர் மர்சூக் பாய் தான் விஜயகாந்தை கரிமேட்டில் உள்ள எனது ஸ்டூடியோவிற்கு அனுப்பி வைத்தார் எனவும் தெரிவித்தார். சினிமாவுக்குள் நுழையும் கனவில் இருந்த விஜயகாந்திடம் அப்போது தாம் காசு எதுவும் வாங்கவில்லை என்றும் பெரிய நிலைக்கு சென்றாலும் தன்னை மறக்காமல் நினைத்தால் போதும் என்று தான் அவரிடம் கூறி அனுப்பி வைத்தேன் எனவும் போட்டோகிராபர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைந்து 12 நாட்களுக்கு மேலாகியும் அவர் குறித்த சுவாரஸ்யமான புதுப் புதுத் தகவல்கள் நித்தமும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications