Exclusive: கேன்சர் நோயாளிகளின் உயிரை காக்கும் HIPEC சிகிச்சை.. விளக்குகிறார் சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட்
சென்னை: புற்றுநோய் பாதித்தவர்களுக்கு பலனளிக்கும் ஹைபெக் சிகிச்சை குறித்து சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட் டாக்டர் வெங்கட் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video

இதுகுறித்து சர்ஜிக்கல் ஆன்காலஜிஸ்ட் டாக்டர் பி வெங்கட் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் புற்றுநோயாளிகளுக்கு கீமோ தெரபி கொடுத்த பிறகு ஒரு வாரம், அல்லது 10 நாட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் கொரோனா உள்ளிட்ட தொற்றுகள் எளிதில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அனைவருக்கும் கொரோனா வர இருக்கும் வாய்ப்பை போலத்தான் புற்றுநோயாளிகளுக்கும் இருக்கிறது. அதனால் அச்சப்பட தேவையில்லை.
கொரோனா பாதித்த புற்றுநோயாளிகளுக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யும் போது மயக்க மருந்து கொடுத்தால் ஏற்கெனவே நுரையீரலில் உள்ள கொரோனா பாதிப்பு மேற்கொண்டு பரவும். இதனால்தான் கொரோனா தொற்று இருக்கும் நேரத்தில் புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை.

மார்பகம்
மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களின் மார்பகத்தை எடுத்துவிடலாம் என முடிவு எடுப்பது பெரும்பாலும் அந்த பெண்ணின் கணவரோ, மாமியாரோ, தாயோ எடுப்பார்கள். மார்பக புற்றுநோயாளிக்கு மார்பகத்தை எடுக்கவோ பாதித்த மார்பகத்தை எடுக்க வேண்டாம் என சொல்வதற்கோ அந்த பெண்ணை தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அப்படியே அந்த பெண்ணின் சம்மதத்துடன் எடுத்துவிட்டு சிகிச்சை முடிந்து ஓராண்டு கழித்து மீண்டும் வருவார்கள்.

தன்னம்பிக்கை
மார்பகத்தை எடுத்துவிட்டதால் என்னால் உறவினர்களின் வீடுகளுக்கோ, அவர்கள் வீட்டு விழாக்களுக்கோ செல்ல முடியவில்லை. தன்னம்பிக்கையே இல்லாமல் இருப்பது போல் இருக்கிறது. சில நோயாளிகளுக்கு மார்பகங்களை எடுத்துவிட்டு அடிவயிற்று பகுதியில் இருந்து தசைகளை எடுத்து வைக்கும் சர்ஜரியும் செய்கிறோம். இதன் முடிவுகள் நல்ல பலனளிக்கின்றன. வயிற்று பகுதியில் பெரிடோனியம் என்ற ஒரு லேயர் இருக்கிறது.

ஹைபெக் என்றால் என்ன
இந்த லேயர்தான் பெருங்குடல், சிறுகுடல், கணையம், கல்லீரல் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும். இதற்கு மேல் மற்றொரு லேயரும் இருக்கும். ஒரு வேளை யாருக்காவது இந்த லேயர்களில் புற்றுநோய் வந்துவிட்டால் HIPEC (Hyperthermic Intraperitoneal Chemotherapy) எனும் சிகிச்சையை வயிற்று பகுதியில் கீமோதெரபியை கொடுப்போம். இதற்கென தனி கருவி உள்ளது. கீமோவை 40 டிகிரி வெப்பப்படுத்தி கொடுப்போம். அதேநேரம் அறுவை சிகிச்சை மூலம் அங்குள்ள கட்டிகளையும் அகற்றிவிடுவோம்.
நவீன வாழ்க்கை முறை
இந்த முறை நிறைய பேருக்கு பலன் தருகிறது. இந்த ஹைபெக் எனும் சிகிச்சையை யாருக்கு தர வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே தர முடியும். இந்த அறுவை சிகிச்சையை செய்து முடிக்க 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை ஆகும். இது பெரிய மருத்துவமனைகளில் பல்வேறு நிபுணர்களை கொண்டு செய்யப்படும். நவீன வாழ்க்கை முறை, மனக் கவலை, ஸ்ட்ரெஸ், ஜங்க் உணவு பழக்கமும் கேன்சர் வர காரணம் என்கிறார் டாக்டர் வெங்கட்.












Click it and Unblock the Notifications