Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடையில் ஜாலி! இனி ஏசி பேருந்துகளிலும் பயணிக்கலாம்! ரூ 2000 பஸ் பாஸ் போதுமே! எங்கெங்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்வதற்காக ரூ 2000 மாதாந்திர பயணச்சீட்டு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து பாஸ் மூலம் ஏசி பேருந்துகளிலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் அதிகம் பயணிப்பது மாநகர பேருந்துகளில்தான். அதிலும் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டதும் பெண்கள் நிறைய பேர் வெள்ளை போர்டு பேருந்துகளில் அதிகம் பேர் பயணிக்கிறார்கள்.

rs 2000 bus pass

இன்று டீலக்ஸ் மாநகர பேருந்துகள் வந்துவிட்டாலும் அதில் டிக்கெட் விலை சற்று உயர்வை கருத்தில் கொண்டு பலர் வெள்ளை போர்டு பேருந்துகளுக்காக காத்திருந்து பயணம் செய்கிறார்கள்.

மாநகர பேருந்துகள்

அப்படிப்பட்ட சென்னை மாநகர பேருந்துகள், சென்னை நகர், புறநகர் பகுதிகள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர்கள்

இந்த பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் தங்களது அன்றாட பணிக்கு சென்று வருகிறார்கள். அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் உண்டு, தினமும் பல்வேறு அலுவல் காரணமாக பேருந்தில் பயணிப்போரும் உண்டு.

3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள்

இதற்காக சென்னையில் தினமும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பல்வேறு சலுகைகள் கொண்ட மாதாந்திர பாஸ்கள் உள்ளன. அதாவது மாதம் ரூ 1000 செலுத்தி விருப்பத்திற்கு எந்த மாநகர பேருந்திலும் ஏறி இறங்கி பயணம் செய்யும் வசதி உள்ளது.

டீலக்ஸ்

இந்த பஸ் பாஸை கொண்டு டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகள், சாதாரண டீலக்ஸ் பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் குளிர்சாதன பேருந்துகளில் பயணிக்க முடியாது. தற்போது வெயில் காலம் அதிகரித்துள்ளதால் ஏசி பேருந்துகளுக்கும் மாதாந்திர பயணச் சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ 2000 மாதாந்திர சலுகை பயணச்சீட்டு

இதை கருத்தில் கொண்ட மாநகர போக்குவரத்துக் கழகம் ரூ 2000 மதிப்பிலான மாதாந்திர சலுகை பயணச்சீட்டு திட்டத்தை கொண்டு வந்தது. இதில் அனைத்து விதமான பேருந்துகளிலும் பயணம் செய்யலாம். சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையில் ரூ 2000 மதிப்பிலான மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளதாவது: பயணிகள் கவனத்திற்கு!

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய ரூ.2000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை இன்று முதல் அறிமுகம்!

ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பஸ் பாஸ் எங்கு கிடைக்கும்

இந்த மாதாந்திர பயண சீட்டுகளை அடையாறு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓடி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி, அயனாவரம், பிராட்வே, கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி தொழிற்பேட்டை, ஐயப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், கே.கே.நகர்., எம்கேபி நகர், மந்தைவெளி, பல்லாவரம், பெரம்பூர், பூந்தமல்லி, செங்குன்றம், சைதாப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், திநகர், தாம்பரம் மேற்கு, திருவான்மியூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வடபழனி, வள்ளலார் நகர் மின்ட், வேளச்சேரி, ஐசிஎஃப் உள்ளிட்ட இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+