“கிளைமாக்ஸ்” நெருங்குது.. ரெண்டுல ஒன்னு நிச்சயம்! அண்ணாமலை பேச்சால் நடக்கப்போகும் "அந்த” மாற்றம்
அண்ணாமலையின் இந்த பேச்சை தொடர்ந்து இரண்டில் ஒரு மாற்றம் நிச்சயம் நடக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தன்னுடைய பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது உட்கட்சிக்கு உள்ளேயே புகைச்சலை கிளப்பி இருக்கும் நிலையில், இரண்டில் ஒரு மாற்றம் நிச்சயம் நடக்கும் என்று தெரிகிறது. அது என்ன? விரிவாக பார்ப்போம்.
பாஜக ஐடி விங் மாநிலத் தலைவராக இருந்த நிர்மல் குமாரின் ராஜினாமாவை தொடர்ந்து ஏராளமான பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிவிட்டு அதிமுகவில் இணைந்தது கூட்டணிக்கு உள்ளேயும் பாஜகவிற்கு உள்ளேயும் பூசலை உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில்தான் நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, கரு.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், காந்தி, சரஸ்வதி அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை உரை
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே பாஜகவை வளர்க்க முடியும். நான் பாஜகவை வளர்த்து எடுக்கவே பாடுபட்டு வருகிறேன். உரிய சுதந்திரத்தை எனக்கு அளிக்க வேண்டும். நான் ஒன்றும் மேனேஜர் அல்ல. கட்சியின் மாநில தலைவர் என்றுதான் நான் சொன்னேன்.

அதிமுக கூட்டணி வேண்டாம்
அதிமுகவுடன் 2024 லோக் சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்தால், பாஜகவில் என்னுடைய மாநில தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்து, சாதாரண தொண்டனாக கட்சியில் இருப்பேன். பாஜகவை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைக்கும் திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. எனது பாணியில் செயல்பட முடியாதபோது பதவியில் இருந்து ராஜினாமா செய்து தொண்டனாக செயல்படுவேன்." என்றார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளான வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி போன்றோரே ஆட்சேபனை செய்து இருக்கிறார்கள். அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனோ, அண்ணாமலை கட்சி நிர்வாகிகள் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்து இருக்கிறார்.

அமர் பிரசாத் ரெட்டி
அதே நேரம் அண்ணாமலையின் வலதுகரமான அமர் பிரசாத் ரெட்டியோ, "சூரியன் திசை மாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவது இல்லை. 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம். தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள்.

அதிமுக வரவேற்பு
ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு. ஒரு நாளும் ஊழலை ஏற்றுக்கொள்ளவே முடியாது." என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரான ஆதிராஜாராம், "கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்தது சந்தோசம். சொந்த கட்சியினரே வேவு பார்த்து வருகிறார்கள்." என்று தெரிவித்தார்.

இரண்டில் ஒன்று நடக்கும்.
இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சை தொடர்ந்து இரண்டில் ஒரு மாற்றம் நிச்சயம் நடக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதாவது அண்ணாமலையின் பேச்சை கேட்டு அதிமுகவுடனான கூட்டணியை பாஜக முடிவுக்கு கொண்டு வரும். அல்லது அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications