தமிழக சட்டசபை தேர்தல் வாக்களிப்பு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின்போது வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
Recommended Video

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் துவக்கத்தில் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு நேற்று முதல் சென்னையில் முகாமிட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்திவந்தார்.
இதையடுத்து இன்று மதியம் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு மையங்கள் எண்ணிக்கை 95 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அதாவது இப்போதை விட 25000 வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்படும்.
கொரோனா நோய் பரவல் காலம் என்பதால், வாக்குப் பதிவு செய்யும் நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் சில கட்சிகள் வாக்குப்பதிவு நடைபெற்று இரண்டு நாட்களுக்குள் அதன் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. இது பற்றி ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications