பேரதிர்ச்சி.. நயன்தாரா, கீர்த்தி சுரேஷின் DEEP FAKE ஆபாச வீடியோக்கள்! ஒன் இந்தியா தேடலில் ஷாக் தகவல்
சென்னை: முன்னணி தமிழ் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடிகைகளின் DEEP FAKE போலி ஆபாச வீடியோக்களை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன் இந்தியாவின் தேடலில் சிக்கியுள்ளது.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகைகள், விளையாட்டு வீராங்கனைகள், பெண் சாதனையாளர்கள், பெண் அரசியல் தலைவர்கள் என பலரின் முகத்தை ஆபாச படங்களில் வரும் பெண்களின் நிர்வாண அல்லது ஆபாச வீடியோவுடன் டீப் ஃபேக் எனப்பும் தொழில்நுட்பத்தின் மூலமால மார்பிங் செய்து உண்மையான வீடியோபோல பகிர்ந்து வருவது பெருகி வருகிறது. சம்பந்தப்பட்ட பிரபலம் மீதான வன்மம், பாலியல் ரீதியான பார்வை, பணம் கேட்டு மிரட்டுவது போன்ற காரணங்களை கடந்து சாதாரணமானவர்களும் இதை தற்போது செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

சாதாரண இன்ஸ்டாகிராம், பேஸ்புக் லைக்கிற்காகவும், சமூக வலைதள பக்கத்தை பிரபலமடைய செய்வதற்காகவும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். உண்மைபோல் தெரிந்தாலும், இவை போலி வீடியோக்கள் என்பதை பார்க்கும்போதே புரிந்துகொள்ள முடியும். கண்களை சிமிட்டுவது, நிற மாறுபாடு, வாய் அசைவு, ஆடியோவும் நான் சிங்க், பொம்மை போல் காட்சியளிக்கும் முகம் போன்றவை DEEP FAKE வீடியோக்களை அடையாளம் காட்டிவிடும். ஆனால், இந்த குறைகள் கூட இல்லாமல் துல்லியமாக எடிட் செய்யும் ஆட்களும் உள்ளார்கள்.
அப்படி வெளியானதுதான் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ. அவரது முகத்தை பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான இன்ஸ்டிராகிராம் பிரபலம் ஜாரா பட்டேலின் வீடியோவுடன் மார்பிங் செய்து டீப் ஃபேக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து இருந்தனர். மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இது தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனாலும், டீப் பேக் வீடியோக்களை வெளியிடும் ஆசாமிகள் அடங்கவில்லை. தற்போது தமிழின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் டீப் ஃபேக் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. பேஸ்புக் ஸ்டோரியில் நடிகை கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் வீடியோ பகிரப்பட்டு இருந்தது. பார்த்தவுடனே அது போலி வீடியோ என்று தெரிந்தது. இதை எடிட் செய்து முதலில் வெளியிட்டது யார் என்று அறிவதற்காக அந்த வீடியோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு ஸ்க்ரீன்ஷாட் படத்தை பதிவேற்றம் செய்தோம்.
அப்போது ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் வந்தது. அதன் பெயர் looklike.ai. செயற்கை நுண்ணறிவை குறிக்கும் Ai என்பதை பெயரிலேயே குறிப்பிட்டு இருந்தனர். அதை திறந்து பார்த்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. "செயற்கை நுண்ணறிவை நேசிப்பவர். பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட்" என்று குறிப்பிட்டு ஏராளமான முன்னணி நடிகைகளை டீப் பேக் மூலமாக ஆபாசமாக எடிட் செய்து பதிவேற்றம் செய்து உள்ளார். அதில்தான் நடிகை நயன்தாராவையும் இதேபோல் ஆபாசமாக எடிட் செய்து இருப்பது தெரியவந்தது.
அவர் மட்டுமின்றி ராஷ்மிகா மந்தனாவின் முகத்தையும் வேறொரு பெண்ணின் உருவத்துடன் எடிட் செய்துள்ளனர். பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் உள்ளிட்ட பல நடிகைகளின் வீடியோக்களை ஆபாசமாக உடையணிந்த வேறு பெண்களின் உருவத்துடன் மார்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பதிவிறக்கம் செய்து மற்றவர்கள் வெவ்வேறு பக்கங்கள், சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள். இந்த வீடியோக்களை இந்த பக்கத்தின் அட்மின் எடிட் செய்து பகிர்ந்தரா அல்லது இவரும் வேறு பக்கத்தில் எடுத்து பதிவேற்றம் செய்தாரா என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது வேலைகளை எளிதாக்கும் முறை என்று கூறப்பட்ட நிலையில் அது பெண்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண பெண்களையும் சமூக விரோதிகள் இதுபோல் எடிட் செய்து மிரட்டி காரியம் சாதிக்கும் அபாயங்களும் உள்ளன. இத்தகைய குற்றங்கள் அரங்கேறுவதற்கு முன்பாக இவற்றை தடுக்க கடுமையான சட்டங்களை மத்திய அரசு இயற்றிட வேண்டும். அதேபோல் இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடவே முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்தை அந்த நிறுவனங்கள் மேம்படுத்துவதுடன், கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications